விளையாட்டு

பிசிசிஐ நிர்வாகக் குழு: குஹாவைத் தொடர்ந்து இவரும் வெளியேறுகிறார்!

webteam

ராமச்சந்திர குஹாவைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) நிர்வாகக் குழுவிலிருந்து விக்ரம் லிமாயேவும் வெளியேற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஐடிஎஃப்சி நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக உள்ள விக்ரம் லிமாயே, கடந்த ஜனவரி முதல் பிசிசிஐ நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளார். தேசிய பங்குச் சந்தையின் (NSE) தலைமை செயலதிகாரி பதவியை ஏற்க இருப்பதால் பிசிசிஐ நிர்வாகக் குழுவில் இருந்து விக்ரம் லிமாயே பதவி விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது பணி நியமனத்துக்கு செபி (SEBI) அமைப்பு ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளதால், விரைவில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட நிர்வாகக் குழுவில் இடம்பெற்றிருந்த வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். பிசிசிஐ நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக முன்னாள் தலைமை தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையில் டயானா எடுல்ஜி உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழுவினை உச்சநீதிமன்றம் நியமித்தது.