விளையாட்டு

ஐபிஎல் மகளிர் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையையும் பெற்ற வையாகாம்! எத்தனை கோடிக்கு தெரியுமா?

ஐபிஎல் மகளிர் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையையும் பெற்ற வையாகாம்! எத்தனை கோடிக்கு தெரியுமா?

PT

ஐபிஎல் மகளிர் கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமையையும் வியாகாம் 18 நிறுவனமே பெற்றுள்ளது.

இந்தியாவில் கடந்த 15 ஆண்டுகளாக ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில், மகளிருக்கும் இதேபோன்று ஐபிஎல் தொடரை நடத்துவதற்கு பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

2023 மகளிர் ஐபிஎல் போட்டியில் 5 அணிகள் கலந்துகொள்ள இருப்பதாகவும், வரும் ஜனவரி 25ஆம் தேதி, அதற்கான அணிகள் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும், மகளிர் ஐபிஎல் அணிகளுக்கான வீராங்கனைகள் ஏலம், பிப்ரவரி மாதத்தில் நடைபெற்று, மார்ச் மாதத்தில் இப்போட்டி தொடங்கும் என பிசிசிஐ தரப்பிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், மகளிர் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையையும் ரிலையன்ஸின் வையாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது. 2023ஆம் ஆண்டிலிருந்து 2027ஆம் ஆண்டு வரையான ஐந்தாண்டுகளுக்கான மகளிர் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப வயாகாம் 18க்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஐபிஎல் ஆட்டத்துக்கு ரூபாய் 7.09 உரிமை கட்டணம் என்ற விகிதத்தில், 5 ஆண்டு ஒளிபரப்பு உரிமத்தை வயாகாம் 18 வாங்கியுள்ளது.

அதன்படி, 5 ஆண்டுகளுக்கு ரூ.951 கோடி தர ஒப்புக்கொண்டுள்ளது. இந்த உரிமை இந்தியா உள்பட அனைத்து நாடுகளுக்கும் அனைத்து விதமான தொலைக்காட்சி சேனல் மற்றும் டிஜிட்டல்களுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனமே, ஆடவர் ஐபிஎல் போட்டியின் உரிமையையும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.23.758 கோடிக்குப் பெற்றுள்ளது. மேலும், ஐபிஎல் 2023 போட்டியை இலவசமாக ஒளிபரப்ப ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.