விளையாட்டு

மகளிர் டி20 சேலஞ்ச் : சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தி வெலாசிட்டி அணி வெற்றி

மகளிர் டி20 சேலஞ்ச் : சூப்பர்நோவாஸ் அணியை வீழ்த்தி வெலாசிட்டி அணி வெற்றி

EllusamyKarthik

மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் தொடரை கடந்த 2018 முதல் நடத்தி வருகிறது பிசிசிஐ. 

SUPERNOVAS, TRAILBLAZERS, VELOCITY என மூன்று அணிகள் பங்கேற்கும் இந்த டி20 தொடர் ரவுண்டு ராபின் முறையில் நடைபெறுகிறது.

ஷார்ஜாவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சூப்பர்நோவாஸ் அணியும், வெலாசிட்டி அணியும் மோதின. 

டாஸ் வென்ற வெலாசிட்டி அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பவுலிங் தேர்வு செய்தார். 

முதலில் பேட் செய்த சூப்பர்நோவாஸ் 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்களை எடுத்தது. 

தொடர்ந்து இலக்கை விரட்டிய வெலாசிட்டி அணி 10 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

வேதா கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மா வர்மா, சன் லஸ் என மூன்று பேரும் சிறப்பாக விளையாடி வெலாசிட்டி அணிக்கு வெற்றி தேடி கொடுத்தனர்.

19.5 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது வெலாசிட்டி.