விளையாட்டு

பப்ஜி விளையாட முடியாததால் மன உளைச்சல்?: கல்லூரி மாணவர் தற்கொலை

பப்ஜி விளையாட முடியாததால் மன உளைச்சல்?: கல்லூரி மாணவர் தற்கொலை

webteam

மேற்கு வங்கத்தில் பப்ஜி விளையாட முடியாத காரணத்தினால் கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பயன்பாட்டாளர்களை கொண்ட கேம் செயலி ‘பப்ஜி’. இந்த கேமிற்கு அதிதீவிர பிரியர்களாக இந்திய இளைஞர்கள் உள்ளனர். இந்த 'கேம்' ஆல் பல அசம்பாவித சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. இந்நிலையில் மத்திய தொழில்துறை அமைச்சகம் ‘பப்ஜி’ உள்ளிட்ட 118 மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

பாதுகாப்பு நலன் கருதியும், இந்திய இறையான்மைக்கு எதிராக இருப்பதாகவும் மத்திய அரசு விளக்கமளித்தது. அதன்படி பப்ஜி கேம் தடையும் செய்யப்பட்டது.இந்நிலையில் மேற்கு வங்கத்தில் பப்ஜி விளையாட முடியாத காரணத்தினால் கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ப்ரிதாம் ஹால்டர் என்ற ஐடிஐ மாணவர் அவரது வீட்டில் தற்கொலை செட்ய்துகொண்டுள்ளார். அவருக்கு வயது 21.

இது குறித்து தெரிவித்துள்ள மாணவரின் அம்மா, காலை உணவு உட்கொண்டு விட்டு அறைக்குள் சென்றான். நான் அவனை மதிய சாப்பாட்டுக்கு அழைத்தேன். அவனது அறை உட்புறமாக பூட்டப்பட்டிருந்தது. பலமுறை அழைத்தும் பதில் இல்லை. நான் அக்கம்பக்கத்தினரை அழைத்தேன். பின்னர் கதவை உடைத்து பார்த்தோம்.

மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான் என தெரிவித்துள்ள்ளார். மேலும் அவன் இரவு முழுவதும் பப்ஜி விளையாடுவான். அது விளையாட முடியவில்லை என்ற காரணத்தினால் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)