விளையாட்டு

இவ்வளவு மோசமாவா விளையாடுவீங்க..? இந்திய அணியில் கழட்டிவிடப்பட்ட 2 வீரர்கள்

இவ்வளவு மோசமாவா விளையாடுவீங்க..? இந்திய அணியில் கழட்டிவிடப்பட்ட 2 வீரர்கள்

EllusamyKarthik

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் விளையாட உள்ள வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்தது.

சுமார் ஆறு மாத காலம் இந்திய கிரிக்கெட் வீரர்கள் கொரோனாவினால் ஆக்டிவாக கிரிக்கெட் விளையாடாத சூழலில் ஐபிஎல் செயல்பாடுகளை கொண்டே வீரர்கள் இந்த தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி. 

அதே நேரத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான ஃபார்ம் காரணமாக இரண்டு வீரர்களை ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தங்களது இடத்தை பறிகொடுத்துள்ளனர்.

அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய கேதார் ஜாதாவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஷிவம் தூபேவும் தான் இந்திய அணியிலிருந்து கழட்டி விடப்பட்டுள்ள வீரர்கள்.

கேதார் ஜாதவ்

இந்தியா கடைசியாக விளையாடிய நியூசிலாந்து தொடரில் ஜாதவ் விளையாடினார். அந்த தொடரில் ஒருநாள் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ் விளையாடி 35 ரன்களை எடுத்திருந்தார் அவர். 

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை அணிக்காக 8 ஆட்டங்களில் விளையாடி வெறும் 62 ரன்களை மட்டுமே குவித்தார் ஜாதவ். ரசிகர்களே கடுப்பாகி அவரை சென்னை அணியின் ஆடும் லெவனிலிருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்தினர்.

அது பிசிசிஐ தேர்வு குழுவின் காதுகளை எட்டியதால் அணியில் தனது இடத்தை இழந்துள்ளார். 

ஷிவம் தூபே

ஆல் ரவுண்டரான தூபேவுக்கு தொடர்ச்சியாக இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2019இல் அறிமுக வீரராக களம் கண்ட தூபே 13 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கடைசியாக நியூசிலாந்து உடனான தொடரில் தூபே விளையாடி இருந்தார். 

கேப்டன் கோலியின் பெங்களூரு அணியில் விளையாடியும் தூபே இந்திய அணியில் தனது இடத்தை இழந்துள்ளார். 

நடப்பு சீசனில் 11 ஆட்டங்கள் விளையாடி 129 ரன்களும், 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்ததால் இந்திய அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.