ஜப்பான் நாட்டின் டோக்யோ நகரில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான கவுன்ட்டவுன் நேற்று தொடங்கியது.
கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லையென்றால் ஏற்கெனவே திட்டமிட்டப்படி ஒலிம்பிக் போட்டிகள் இன்று கோலாகலமாக தொடங்கி இருக்கும். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் போட்டிகள் அடுத்தாண்டு வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒலிம்பிக் போட்டிகளின் புதிய அட்டவணை 2021 கடந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து டோக்யோவில் உள்ள கடிகாரத்தில் , ஒலிம்பிக் போட்டிக்கான 365 நாட்கள் கவுன்ட்டவுன் தொடங்கி உள்ளது. போட்டி திட்டமிட்டபடி தொடங்கி இருந்தால் , இந்நேரம் டோக்கியோ நகரம் விழாக்கோலம் பூண்டிருக்கும். கொரோனா பாதிப்பு நிலைமை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில், 2021-ம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை நடத்த முடியாமல் போகக் கூடும் என்று போட்டியின் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.