தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில், திண்டுக்கல் அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. திண்டுக்கல் நத்தத்தில் நடந்த போட்டியில் மதுரை அணியை , திண்டுக்கல் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மதுரை சூப்பர் ஜெய்ன்ட் அணி, 117 ரன்களில் ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சுரேஷ் குமார் 39 ரன்கள் எடுத்தார். திண்டுக்கல் அணியில் சன்னி குமார் சிங் 3 விக்கெட்களையும், முருகன் அஸ்வின், நடராஜன், சஞ்சய் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். எளிய இலக்கை நோக்கி விளையாடிய, திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, விக்கெட் இழப்பின்றி 11ஆவது ஓவரில் வெற்றியை வசமாக்கியது. திண்டுக்கல் அணியில் சுப்ரமணிய சிவா 41 பந்துகளில் 84 ரன்கள் விளாசி, வெற்றிக்கு உதவினார்.