விளையாட்டு

"வெங்கடேஷ் ஐயர் ஆட்டத்தில் யுவராஜ் சிங்கின் பிரதிபலிப்பு இருக்கிறது" - பார்திவ் படேல்

"வெங்கடேஷ் ஐயர் ஆட்டத்தில் யுவராஜ் சிங்கின் பிரதிபலிப்பு இருக்கிறது" - பார்திவ் படேல்

jagadeesh

வெங்கடேஷ் ஐயர் பேட்டிங் நுணுக்கங்களில் யுவராஜ் சிங் வெளிப்படுகிறார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பார்திவ் படேல் தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறார். நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் 30 பந்துகளில் 53 ரன்களையும். முன்னதாக பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 41 ரன்களையும் சேர்த்தார் இந்த இளம் வீரர். இதனையடுத்து அனைவரது கவனத்தையும் வெங்கடேஷ் ஈர்த்துள்ளார்.

இது குறித்து பேசியுள்ள பார்தில் படேல் "இந்திய ஏ அணிக்காக விளையாடாதவர், எந்த சர்வதேசப் போட்டியிலும் விளையாடாத வெங்கடேஷ் விளையாடும் விதம் மிகப்பிராதமாக இருக்கிறது. அவரது பேட்டிங்கில் இருக்கும் முதிர்ச்சி பலரது கவனத்தையும் ஈர்க்கிறது. மிக முக்கியமாக அவருக்கு எந்த பயமும் இருக்கவில்லை. இந்த ஐபிஎல்லில் நம்பிக்கைக்குறிய இளம் வீரராக அவர் உருவாகி இருக்கிறார் என்பதாகதான் இருக்கிறது" என்றார்.

மேலும் பேசிய அவர் "வெங்கடேஷின் சிறப்பம்சம் என்னவென்றால் அவரால் பேட்டிங் வரிசையில் 1 முதல் 9 இடத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் விளையாட முடியும். அவரால் பந்துவீசவும் முடியும். அவருக்கு மிகச்சிறப்பான எதிர்காலம் இருக்கிறது. அவரது ஆட்டத்தில் யுவராஜ் சிங்கின் பிரதிபலிப்பு இருப்பதை நான் பார்க்கிறேன். அவரிடம் நல்ல ஸ்டைல் இருக்கிறது. மிகவும் நிதானமாக இருக்கிறார். பவுல்ட் மற்றும் மில்னேவின் முதல் பந்திலேயே அவர் சிக்ஸர் அடித்ததெல்லாம் அசத்தல்" என்றார் பார்திவ் படேல்.