விளையாட்டு

பயிற்சியாளர்கள் தேர்வில் நீடிக்கும் பிரச்னை: சச்சின், கங்குலி வேதனை

பயிற்சியாளர்கள் தேர்வில் நீடிக்கும் பிரச்னை: சச்சின், கங்குலி வேதனை

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் நியமனம் குறித்து வெளியாகும் உண்மைக்கு மாறான தகவல்கள் தங்களை புண்படுத்தியிருப்பதாக சச்சின், கங்குலி, லக்ஷ்மன் ஆகியோர் அடங்கிய ஆலோசனைக்குழு தெரிவித்துள்ளது.
தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட கிரிக்கெட் வாரிய நிர்வாகி வினோத் ராய் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய பின்னரே, பந்துவீச்சு ஆலோசகராக ஜாகீர் கானும், வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவல்களை வினோத் ராய்க்கு கடிதம் வாயிலாக அவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர். இந்தப் பிரச்னை குறித்து விளக்கமளித்துள்ள வினோத் ராய், வெளிநாட்டு சுற்றுப்பயணத்திற்கான ஆலோசகராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளது, பேட்டிங் ஆலோசகருக்கு ஓப்பான நியமனம் தான் எனக் கூறியுள்ளார். ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் ஊதியம் எதுவும் பெறாமல் பயிற்சியாளர் தேர்வை நடத்தியது பாராட்டுக்குரியது என அவர் கூறியுள்ளார்.