விளையாட்டு

இங்கிலாந்து பயணத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சதங்களை விளாச ரவி சாஸ்திரியின மூன்று வியூகங்கள்

இங்கிலாந்து பயணத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சதங்களை விளாச ரவி சாஸ்திரியின மூன்று வியூகங்கள்

EllusamyKarthik

இங்கிலாந்து பயணத்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சதங்களை விளாச பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வகுத்துள்ள 3 புதிய பயிற்சி யுக்தி!

இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் 2 ஆம் தேதி அன்று இங்கிலாந்துக்கு பயணிக்கிறது. நியூசிலாந்து அணியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் நீண்ட நெடிய டெஸ்ட் தொடரில் விளையாடவும் உள்ளது இந்தியா. இந்த தொடரில் இந்திய பேட்ஸ்மேன்கள் சதங்களை விளாசி தள்ள மூன்று புதிய பயிற்சி வியூகங்களை தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி வகுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

டெஸ்ட் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சதம் விளாசுவது அணியின் வெற்றிக்கு பெரிதும் கைகொடுக்கும் என்பதால் அதனை கருத்தில் கொண்டு இந்த வியூகம் அமைத்துள்ளாராம் ரவி சாஸ்திரி. ஏனெனில் ரோகித் ஷர்மா மற்றும் பண்டை தவிர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி (12 இன்னிங்ஸ்), புஜாரா (28 இன்னிங்ஸ்), ரஹானே (11 இன்னிங்ஸ்) மாதிரியான பேட்ஸ்மேன்கள் கடைசியாக விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்யாமல் உள்ளனர். இளம் வீரர் சுப்மன் கில் 13 இன்னிங்ஸ் விளையாடி அதில் ஒரு சதம் கூட பதிவு செய்யாமல் உள்ளார்.

இந்நிலையில் அதற்கு தீர்வு காணவே ரவி சாஸ்திரி இந்த யோசனையை முன்னெடுத்துள்ளாராம். அதே நேரத்தில் இந்த வியூகம் இங்கிலாந்து ஆடுகளங்களில் வீரர்கள் ரன் குவிக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அந்த மூன்று வியூகங்கள்? அதன் பயன்கள்!

-வலைபயிற்சியில் தானியங்கு ரோபா ஆர்ம் வீசும் பந்தை எதிர்கொள்ளும் போது ஆடுகளத்தின் நீளத்தை 22 யார்டுகளிலிருந்து 16 என குறைக்கபட உள்ளதாம். இதன் மூலம் வேகமாக வரும் டெலிவரியை ஒரு நொடி முன்கூட்டியே பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்வார்களாம். அதனால் பந்தை ஈஸியாக ஹேண்டில் செய்ய உதவுமாம். 

-ஷைன் செய்யப்பட்ட பந்துகளை வலைப்பயிற்சியில் பயன்படுத்தி ஹெவி ஆக்குவது. அதன் மூலம் பந்தை எப்போது விட வேண்டும், எப்போது அடிக்க வேண்டும் என்ற கலையில் கைதேருவது. 

-அனைத்து பந்துகளையும் ஆடாமல் எதை விட வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவது. இதன் மூலம் பேட்ஸ்மேன்கள் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ற வகையில் விளையாட முடியுமாம்.