விளையாட்டு

பேட்ஸ்மேனை பந்தால் அடித்த பவுலர்.. 5 ரன்கள் பெனால்டி கொடுத்த நடுவர்..!!

பேட்ஸ்மேனை பந்தால் அடித்த பவுலர்.. 5 ரன்கள் பெனால்டி கொடுத்த நடுவர்..!!

EllusamyKarthik

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பமாகி உள்ளன. தற்போது அங்கு பாப் வில்லிஸ் கோப்பைக்கான தொடர் ஆரம்பமாகியுள்ளது. பதினெட்டு அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் லங்காஷயர் மற்றும் லீசெஸ்டர்ஷையர் அணிக்கு எதிரான போட்டி நடைபெற்று வருகிறது. 

முதல் இன்னிங்சில் லங்காஷயர் அணி 322 ரன்களை குவித்துள்ளது. அந்த இன்னிங்ஸில் லங்காஷயர் அணிக்கு எதிராக 104வது ஓவரில் பந்து வீசிய லீசெஸ்டர்ஷையர் பவுலர் டைட்டர் க்ளீன் திடீரெனெ பேட்ஸ்மேன் டேனி லேம்பை பந்தால் அடித்தார். 

பின்னர் களத்தில் இருந்த அம்பயர்கள் கிரிக்கெட் விதியின் படி ஒரு வீரரின் மீது பந்தை அபாயகரமாக வீசுசிய பவுலர் டைட்டர் க்ளீனின் செயல் தவறானது என்பதால் பீல்டிங் செய்த அணிக்கு ஐந்து ரன்கள் பெனல்டி கொடுக்கப்பட்டது.

பேட்ஸ்மேன் லேம்பின் காலில் பட்ட பந்தினால் வலி தாங்க முடியாமல் கிரீஸை விட்டு நகர்ந்து சென்றார். 

பவுலர் டைட்டர் க்ளீனின் செயலுக்கு கிரிக்கெட் உலகின் பிரபலங்கள் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். இந்த இன்னிங்ஸில் டைட்டர் க்ளீன் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.