விளையாட்டு

தோனிக்கு ஹெலிகாப்டர் ஷாட்டை அறிமுகப்படுத்திய சந்தோஷ் லால் !!

EllusamyKarthik

சங்க காலங்களில் போரின் போது எதிரியை வீழ்த்த பிரம்மாஸ்த்திரத்தை பயன்படுத்துவார்கள். அது போல எதிரணியினரின் யாக்கர் பந்துகளை துவம்சம் செய்ய தோனி பயன்படுத்தும் அஸ்த்திரம் தான் ஹெலிக்காப்டர் ஷாட். 

உடம்பை அலட்டாமல் கை மூட்டுகளால் மட்டுமே பேட்டை ஒரு சுற்று சுற்றி பந்தை விளாசுவது தான் இந்த ஷாட்டின் சிறப்பு. சர்வதேச கிரிக்கெட்டில் தோனிக்கு முன்னர் சச்சின் ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடியிருந்தாலும் அதை கிரிக்கெட் ஷாட் புக்கில் செதுக்கிய சிறப்பு தோனியையே சாரும். 

தோனிக்கு இந்த ஷாட்டை அறிமுகப்படுத்தியது ஜார்கண்ட் உள்ளூர் கிரிக்கெட் வீரர் சந்தோஷ் லால் தான். 

யார்கர் பந்தை பவுண்டரிக்கு பறக்க விட ஹெலிகாப்டர் ஷாட்டை தோனி அடிப்பது வழக்கம். 2011 உலக கோப்பை இறுதி போட்டி வெற்றி உட்பட இந்தியாவுக்காக பல வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார் தோனி.