விளையாட்டு

கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனாவின் மறைவுக்காக துக்கம் அனுஷ்டிக்கும் கடவுளின் தேசம்!

கால்பந்தாட்ட ஜாம்பவான் மாரடோனாவின் மறைவுக்காக துக்கம் அனுஷ்டிக்கும் கடவுளின் தேசம்!

EllusamyKarthik

கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான் டீகோ மாரடோனா நேற்று அர்ஜென்டினாவில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 60. அர்ஜென்டினாவுக்காக பிபா கால்பந்தாட்ட உலக கோப்பையை வென்று கொடுத்தவர். 

நூற்றாண்டின் சிறந்த கோலை அடித்தவர் என மாரடோனாவின் சாதனையை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உண்டு.

அதிலும் இந்தியாவில் கேரள மாநிலத்தில் மாரடோனாவை விடாப்பிடியாக துரத்தும் ரசிகர் கூட்டமே உண்டு. அது கடந்த 2012இல் தனியார் நிகழ்வுக்காக கேரளாவுக்கு வந்திருந்த மாரடோனாவை ரசிகர்கள் அன்பால் திக்கு முக்காட செய்தனர். அவரது வருகைக்கு பின்னர் அவர் தங்கியிருந்த ஹோட்டல் மியூசியமாக மாற்றாப்பட்டது. 

 

இந்நிலையில் மாரடோனாவின் மரணம் தங்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கேரள ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 

“அந்த மாயாஜால ஆட்டக்காரரின் நினைவுகள் எங்கள் மாநில கால்பந்தாட்ட ரசிகர்களின் மனதில் இரண்டற கலந்திருக்கும். அவரை நாங்கள் எல்லோரும் இழந்து தவிக்கிறோம். கால்பந்தாட்டமும் அதன் ஹீரோவை இழந்து நிற்கிறது” என கேரள முதல்வன் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

மரடோனாவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கேரள மாநில அரசு விளையாட்டுத் துறையில் இரண்டு நாள் துக்கத்தை அனுஷ்டிப்பதாக அறிவித்துள்ளது. இதனை அம்மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயராஜன் உறுதி செய்துள்ளார்.