விளையாட்டு

'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்

'கே.எல்.ராகுலுக்கு முதலில் டிக்கெட் கொடுத்து ஊருக்கு அனுப்பவும்' சுனில் கவாஸ்கர் காட்டம்

webteam

கே.எல்.ராகுலை முதலில் ஆஸ்திரேலியாவில் இருந்து விமான டிக்கெட் கொடுத்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்புங்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் காட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்று சமநிலையில் இருக்கின்றன.

இந்திய அணியின் இந்தத் தோல்வி குறித்து முன்னாள் வீரர் சுனிஸ் கவாஸ்கர் கொதித்து தள்ளியுள்ளார். இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றக்கு பேட்டியளித்த சுனில் கவாஸ்கர் " இந்திய அணி தொடரை வெல்லவில்லை என்றால் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் தொடருக்கு பின் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் பங்களிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் பேசிய அவர் "தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற தொடரில் இருந்து வீரர்கள் தேர்வில் தொடர்ந்து தவறுகள் புரிகின்றனர். இதனால்தான் இந்திய அணிக்கு பாதிப்பு ஏற்படுகிறது. அணியில் செயல்பாட்டில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் வழிமுறைகளை நிர்வாகம் அறிய வேண்டும். ஸ்மித், வார்னர்  இல்லாத ஆஸியை வெல்ல முடியவில்லை ! ஏன் என்று தேர்வுக்கு என்றால் இதுகுறித்து சிந்திக்க வேண்டும்" என்றும் கூறியுள்ளார். 

மேலும் தெரிவித்த சுனில் கவாஸ்கர் "இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கா பஞ்சம் ? பணக்கார அமைப்பான பிசிசிஐயால் 40 பேர் கொண்ட அணியை கூட அனுப்ப முடியும். இப்போது அணியில் சிறப்பாக விளையாட வீரர்கள் எல்லாம் மீண்டும் வந்து உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும். இந்தப் பட்டியலில் முதலில் கே.எல்.ராகுலுக்கு விமான டிக்கெட் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்புங்கள்" என்று காட்டமானார். மீதமுள்ள 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் ஆடக்கூடாது. ரஞ்சி கோப்பைக்கான கர்நாடக அணியில் வந்து ஆட வேண்டும்" என்றார் அவர்.