விளையாட்டு

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் - இறுதி போட்டிகள் தொடங்கியது

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் - இறுதி போட்டிகள் தொடங்கியது

webteam

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்று ஆட்டம் நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி கடந்த 12 ம் தேதி தொடங்கியது. டென்னிஸ் போட்டியின் இறுதி சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இறுதி சுற்றில் ஒற்றையர் பிரிவில் செக்குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவா, போலந்து வீராங்கனை மேக்டா லினெட் பலப்பரீட்சை நடத்தவுள்ளனர்.

இரட்டையர் பிரிவில்  கேப்ரியல்லா டாப் (கனடா), லுசா ஸ்டெபானி ( பிரேசில்),கூட்டணி, ஆனா லின்கோவா( ரஷ்யா),நடிலா ஜலாமிட்ஸ்( ஜார்ஜியா) இணை மோதுகிறது..

சென்னை ஓபன் தொடர் இரட்டையர் பிரிவில் லூயிசா ஸ்டேபானி,கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி இணை வெற்றி பெற்றது. 6-1,6-2 என்ற புள்ளி கணக்கில் எளிதாக வெற்றி பெற்றது.

சென்னை ஓபன் தொடரின் இறுதி போட்டியை நேரில் பார்க்க விஸ்வநாதன் ஆனந்த், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி மற்றும் ஆ.ராசா, சட்டமன்ற உறுப்பினர் எழிலன் உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளனர்.

டென்னிஸ் மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 7.30 மணிக்கு வருகை தந்து இரட்டையர் பிரிவில் வெற்றி பெரும் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்குகிறார் அதன் பின் ஒற்றையர் பிரிவு போட்டிகளை துவங்கி வைக்கிறார். போட்டியில் வெற்றி பெறும் வீராங்கனைகளுக்கு பரிசுகளை வழங்குகிறார்.

போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெரும் வீரங்கனைக்கு 26 லட்சம் ரூபாயும், இரட்டையர் பிரிவில் வெற்றி பெரும் வீராங்கனைகளுக்கு 9 லட்சம் ரூபாயும் பரிசு தொகையாக வழங்கப்பட உள்ளது.

இதையும் படிக்க: 2023 ஐபிஎல் தொடரில் அறிமுகமாகும் புதிய TACTICAL SUBSTITUTE விதிமுறை -பிசிசிஐ திட்டம்