விளையாட்டு

இத்தாலியின் புகழ்பெற்ற நாபோலி மைதானத்திற்கு மரடோனாவின் பெயர் !

இத்தாலியின் புகழ்பெற்ற நாபோலி மைதானத்திற்கு மரடோனாவின் பெயர் !

EllusamyKarthik

கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான் டீகோ மாரடோனா நேற்று அர்ஜென்டினாவில் மாரடைப்பால் கடந்த நவம்பர் 25 ஆம் தேதி அவரது 60 வயதில் உயிரிழந்தார். அர்ஜென்டினாவுக்காக ஃபிபா கால்பந்தாட்ட உலக கோப்பையை வென்று கொடுத்தவர். நூற்றாண்டின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரரும் கூட. 

கடந்த 1984 முதல் 1991 வரை இத்தாலியின் தொழில்முறை கால்பந்தாட்ட கிளப் அணியான நாபோலி அணிக்காக மரடோனா விளையாடி உள்ளார். அந்த அணி இரு முறை சீரி A கோப்பையை வெல்ல உதவினார் அவர். அவரின் பங்களிப்பை போற்றும் வகையில், நாபோலி கால்பந்து மைதானத்தின் பெயரை "Stadio Diego Armando Maradona" என அழைக்கப்படவுள்ளது.

இதற்கு முன்னதாக இந்த மைதானம் Stadio San Paolo என அழைக்கப்பட்டது. சுமார் 54726 பேர் இந்த மைதானத்தில் அமர்ந்து கால்பந்தாட்டத்தை ரசிக்கலாம்.