விளையாட்டு

எல்பிடபிள்யூவுக்கு அர்த்தம் தெரியாத ஷாகித் அஃப்ரிதி!

எல்பிடபிள்யூவுக்கு அர்த்தம் தெரியாத ஷாகித் அஃப்ரிதி!

webteam

எல்பிடபிள்யூவுக்கு அர்த்தம் தெரியாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிதியை நெட்டிசன்கள் மீம்ஸ்கள் மூலம் கலாய்க்கத் தொடங்கியுள்ளனர். 
இருபது ஆண்டுகளுக்கு மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய ஷாகித் அஃப்ரிதி சமீபத்தில் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றின் ரியாலிட்டி ஷோவில் அஃப்ரிதி கலந்துகொண்டார். அந்த ஷோவில் அதிக ஒலியுடைய இசையைக் கேட்டுக்கொண்டே நெறியாளர் கூறும் கிரிக்கெட் தொடர்பான வார்த்தைகளை அவர் கண்டுபிடிக்க வேண்டும். அதன்படி, நெறியாளர் கூறிய முதல் 2 வார்த்தைகளைக் கண்டுபிடித்த அஃப்ரிதியால் மூன்றாவது வார்த்தையான எல்பிடபிள்யூவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தம்மால் அந்த வார்த்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று அஃப்ரிதி கூற, அந்த வார்த்தையை நெறியாளர் கூறிவிட்டார். நெறியாளர் கூறியபின்னரும் எல்பிடபிள்யூ என்றால் என்ன?. கிரிக்கெட் உலகில் அதன் பொருள் என்ன? என்று அஃப்ரிதி கேட்டது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சர்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக விளையாடிய அஃப்ரிடிக்கு எல்பிடபிள்யூ முறை குறித்து தெரியவில்லையா என்று ஒரு நெட்டிசன் கேள்வி எழுப்பியுள்ளார். அதேபோல, எல்பிடபிள்யூவுக்கு அர்த்தம் தெரியாத ஷாகித் அஃப்ரிதிக்கு ஓய்வுக்கு உண்மையான பொருள் தெரியுமா என்று இன்னொரு நெட்டிசன் பதிவிட்டுள்ளார்.