திறமையும், அழகும் நிறைந்தவர் டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா. விளையாட்டு உலகில் புகழ்பெற்ற சானியா மிர்சாவின் அழகு திரைப்பட இயக்குநர்களையும் கவர, பலரும் அவரை சினிமாவில் நாயகியாக்க அழைப்பு விடுத்தனர். அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்த சானியா மிர்சா தற்போது பாலிவுட் படத்தில் நாயகியாக அரிதாரம் பூச இருக்கிறார்.
ஹைதராபாத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பதால் தெலுங்கு சினிமாவில் தான் நடிப்பார் என காத்துக் கொண்டிருந்தனர் டோலிவுட் படைப்பாளிகள். ஆனால், அவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.
இதனை பாலிவுட் இயக்குநரும் ,நடிகருமான ஃபர்ஹான் அக்தர் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ அதிர்ஷவசமாக சானியா மிர்சா வெள்ளித்திரைக்கும் வருகிறார். அவரது தந்தை இம்ரான் மிர்சாவும், சானியா மிர்சா நடிக்க இருக்கும் படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்’ எனத் தெரிவித்துள்ளார். இதுபற்றிய விவிவான தகவல்கள் விரைவில் வெளிவரும் எனத் தெரிவித்துள்ளார்.
30 வயதான சானியா மிர்சா அந்தப்படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விளையாட்டு வீரர்களின் பயோகிராஃபிகள் தொடர்ந்து படமாகி வரும் நிலையில் இந்தப்படம் சானியா மிர்சாவின் பயோகிராஃபியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அவரது தந்தையும் நடிப்பதால் இது அவரது வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். இந்தப்படம் தந்தை மகள் பாசத்தை வெளிப்படுத்த இருப்பதாகவும், அதன் மூலம் சமூகத்துக்கு மிக முக்கியமான கருத்தைச் சொல்ல உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.