விளையாட்டு

‘டெண்டுல்கர் கேப்டன் பொறுப்பில் உத்வேகத்தோடு செயல்பட தவறிவிட்டார்’-சசி தரூர்

‘டெண்டுல்கர் கேப்டன் பொறுப்பில் உத்வேகத்தோடு செயல்பட தவறிவிட்டார்’-சசி தரூர்

EllusamyKarthik

‘டெண்டுல்கர் கேப்டனாக இருந்தபோது வலுவான அணி அமையவில்லை. அதே நேரத்தில் அவர் அந்த பொறுப்பில் உத்வேகத்தோடு செயல்படவும் தவறிவிட்டார்’ என தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர்.

ஸ்போர்ட்ஸ்கீடா நிறுவனத்துடனான பேட்டியில் சசி தரூர் இதனை தெரிவித்துள்ளார். 

“சச்சின் டெண்டுல்கர்தான் இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தக் கூடிய கேப்டன் என அவர் அந்த பொறுப்புக்கு முன்னர் வரும் வரை நினைத்திருந்தேன். களத்தில் சச்சின் அவ்வளவு ஆக்டிவாக செயல்படுவார். 

ஆனால் அவர் கேப்டனாக வந்ததுமே அது அனைத்தும் மாறியது. அவர் அந்த பொறுப்பில் இருந்தபோது வலுவான வீரர்கள் கொண்ட இந்திய அணி அமையாததும் அதற்கு ஒரு காரணம். அதே நேரத்தில் அவர் அந்த பொறுப்பில் உத்வேகத்தோடு செயல்படவும் தவறிவிட்டார்.

அவரது ஆட்டத்தில் கவனம் செலுத்த விரும்பியதால் கேப்டன் பதவியை மகிழ்ச்சியோடு துறந்தார். மீண்டும் சச்சினை தேடி கேப்டன் பதவி வந்தபோது அதை வேண்டாமென சொன்னவர் அவர்’ என தெரிவித்துள்ளார் சசி தரூர். 

சச்சின் கேப்டனாக செயல்பட்ட 98 போட்டிகளில் இந்தியா 27 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.