தன்வீர் அகமது, ரோகித், கோலி, பும்ரா எக்ஸ் தளம்
விளையாட்டு

”அந்த 3 பேரும் இல்லாவிட்டால், இந்தியா அவ்ளோ தான்! இலங்கை போட்டியின் நிலைதான்”- பாக். முன்னாள் வீரர்!

ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இல்லாதபட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியாவை பாகிஸ்தான் அணி எளிதில் வீழ்த்தும் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்வீர் அகமது ஏளனமாக விமர்சித்துள்ளார்.

Prakash J

இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடியது. இதில் முதல் போட்டி சமனில் முடிந்த நிலையில், அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்த தோல்வி கிரிக்கெட் வல்லுநர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இல்லாதபட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியாவை பாகிஸ்தான் அணி எளிதில் வீழ்த்தும் என அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர் தன்வீர் அகமது ஏளனமாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர், “முதலில், பாகிஸ்தானுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு முன், இந்தியா தன்னுடைய செயல்பாடுகளைப் பார்க்க வேண்டும். ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் போட்டிகளில் இல்லை என்றால், பாகிஸ்தான் எளிதாக இந்தியாவை வீழ்த்தும்.

எதிர்காலத்தில் இந்திய பேட்டிங்கில் என்ன நடக்கும் என்பதை நீங்கள் இதன்மூலம் (இலங்கை தொடர்) அறியலாம். இந்தியாவில் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது, ஆனால் பேட்டிங் வரிசையில் போராட்டம் ஏற்படும். விராட் மற்றும் ரோகித் தவிர, தற்போது இந்திய அணியில் உள்ள அனைத்து புதிய பேட்டர்களால் எதிர்காலத்தில் அணியை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது” என அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க: டெல்லி | காதலியின் பிறந்த நாள்.. தாயின் நகைகளைத் திருடி ஐபோன் வாங்கிக் கொடுத்த 9ஆம் வகுப்பு மாணவர்!