Aus vs Wi - Warm up Match cricinfo
T20

3-வது கோப்பையை எடுத்து வைங்க.. ஆஸிக்கு எதிராக காட்டடி அடித்த வெஸ்ட் இண்டீஸ்! 257 ரன்கள் குவிப்பு!

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பை தொடர் ஜூன் 2ம் தேதி கோலாகலமாக தொடங்கப்படவிருக்கும் நிலையில், கோப்பையை வெல்வதற்காக 20 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன. ஐந்து-ஐந்து அணிகளாக 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதவிருக்கின்றன.

குரூப் A-ல்,

இந்திய அணியுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து மற்றும் கனடா அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் B-ல்,

நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்துடன் ஆஸ்திரேலியா, ஸ்காட்லாந்து, நமீபியா மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன.

INDIA TEAM

குரூப் C-ல்,

சொந்த மண்ணில் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் ஜெனிவா முதலிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

குரூப் D-ல்,

தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து மற்றும் நேபாள் முதலிய 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.

பயிற்சி போட்டியில் ஆஸியை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்!

டி20 உலகக்கோப்பை பல்வேறு எதிர்ப்பார்ப்புகளுடன் ஜூன் 2-ம் தேதி கோலாகலமாக தொடங்கப்பட உள்ள நிலையில், பயிற்சி ஆட்டங்களில் அணிகள் விளையாடிவருகின்றன.

நிக்கோலஸ் பூரன்

இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்றைய பயிற்சி போட்டியில் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணியில், அனைத்து வீரர்களும் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தினர்.

அதில் பிரைம் ஃபார்மில் ஜொலித்து வரும் நிக்கோலஸ் பூரன் மற்றும் ரோவ்மன் பவல் இருவரும் இணைந்து 9 பவுண்டரிகள் 12 சிக்சர்களை பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினர். அதிகபட்சமாக 25 பந்துகளை எதிர்கொண்ட நிக்கோலஸ் பூரன் 5 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 75 ரன்களை குவித்தார்.

ரோவ்மன் பவல்

ரோவ்மன் பவல் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 25 பந்துகளில் அரைசதமடிக்க, கடைசியாக வந்து காட்டடி அடித்த ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 18 பந்தில் 4 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என துவம்சம் செய்து 47 ரன்கள் அடிக்க 20 ஓவரில் 257 ரன்கள் என்ற இமாலய டோட்டலை குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

ஜோஸ் இங்கிலிஸ்

மிகப்பெரிய டோட்டலை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில், கேப்டன் மிட்செல் மார்ஸை தவிர அனைவரும் அதிரடியான பேட்டிங்கையே வெளிப்படுத்தினர். நல்ல பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜோஸ் இங்கிலீஸ் 30 பந்தில் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என பறக்கவிட்டு 55 ரன்கள் அடித்து அதிகபட்ச ரன்களை பதிவுசெய்தார். அவரை தவிர நாதன் எல்லிஸ் 39 ரன்கள் அடித்தார். இறுதிவரை போராடிய ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 222 ரன்கள் அடித்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய கிரிக்கெட் அணி

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் பயிற்சி ஆட்டமானது, நாளை இரவு 8 மணிக்கு நடக்கவிருக்கிறது.