wi vs eng cricinfo
T20

மகளிர் உலகக்கோப்பை| முதலிடத்தில் இருந்த ENG-ஐ வெளியேற்றிய WI! முதல் அரையிறுதியில் AUS vs SA மோதல்!

அரையிறுதிக்கு செல்லும் இடத்தில் வலுவாக இருந்த இங்கிலாந்து மகளிர் அணியை வெஸ்ட் இண்டீஸ் அணி யாரும் எதிர்பாரத வகையில் வெளியேற்றி மிரட்டிவிட்டது.

Rishan Vengai

2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பான தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து முதலிய 10 அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

aus vs ind

இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்ட நிலையில், ஒவ்வொரு அணியும் 4 லீக் போட்டிகளில் விளையாடின. இதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும் நிலையில், 4 அணிகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

டி20 உலகக்கோப்பை

முதல் குரூப்பில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தகுதிபெற்ற நிலையில், இரண்டாவது பிரிவிலிருந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் தகுதிபெற்றுள்ளன.

இங்கிலாந்துக்கு அதிர்ச்சி கொடுத்த WI!

மூன்று போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளிலும் வெற்றிபெற்று குரூப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த இங்கிலாந்து அணியை, தரமான ஒரு ஆட்டத்தின் மூலம் 3வது இடத்திற்கு விரட்டி தொடரிலிருந்தே வெளியேற்றியுள்ளது வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி.

முதலில் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியில், தொடக்கவீரர்கள் இருவரும் இங்கிலாந்து பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினர்.

விக்கெட்டையே விட்டுக்கொடுக்காத தொடக்க ஜோடி 12 ஓவர்களுக்கு 100 ரன்களை கடந்து மிரட்டியது. தொடக்கவீரர்கள் இருவரும் அரைசதமடித்து அசத்த, 142 ரன்களை எளிதாக எட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றது.

4 போட்டிகளில் 3-ல் வெற்றிபெற்ற போதும் இங்கிலாந்து அணியால் அரையிறுதிக்கு தகுதிபெற முடியவில்லை.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா முதலிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்ற நிலையில்,

அக்டோபர் 17-ம் தேதியான நாளை நடைபெறும் முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும்,

அக்டோபர் 18-ம் தேதியன்று நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன.