Virender Sehwag PT Desk
T20

”இந்த வீரரை இந்திய அணியின் ஜெர்ஸியில் பார்க்கணும்” - சேவாக்கே எதிர்பார்க்கும் அந்த வீரர் யார்?

Jagadeesh Rg

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

பஞ்சாப் அணிக்காக விளையாடும் ஜிதேஷ் சர்மாவை விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவதை தான் பார்க்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் மும்பை அணி வெற்றிப்பெற்றாலும், பஞ்சாப் அணியின் ஜிதேஷ் சர்மா சிறப்பாக விளையாடினார். இந்தத் தொடர் முழுவதுமே சிறப்பான பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி வரும் ஜிதேஷ் சர்மா மும்பைக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 27 பந்துகளில் 49 ரன்களை சேர்த்தார். அவரின் இந்த ஆட்டத்திறனை பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாகும் புகழ்ந்துள்ளார்.

Jitesh Sharma

இது குறித்து பேசிய சேவாக், "நான் எப்போதும் கிரிக்கெட்டில் வளரும் இளைஞர்களுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பந்தை அடிப்பதற்கு எது சரியான நேரமோ அப்போது அடித்துவிட வேண்டும். எந்தப் பந்தை தொட வேண்டும், எதனை விட வேண்டும் என்பதுதான் கிரிக்கெட்டின் அடிப்படை. அதனை சரியாக செய்தாலே போதும், ரன்களை குவிக்கலாம்.. இதையெல்லாம்தான் ஜிதேஷ் சர்மா மிக சரியாக செய்கிறார். ஜிதேஷ் சர்மா பந்தை மிகவும் கூர்மையாக கவனிக்கிறார். அதனால்தான் அவரால் சிறப்பாக பந்துகளை அடிக்க முடிகிறது. டி20 போட்டிகளில் எல்லா பந்துகளையும் விட்டுக்கொண்டு இருக்க முடியாது. சரியான நேரத்தில் அதனை அடிக்க வேண்டும்" என்றார்.

jitesh sharma

மேலும் பேசிய அவர் "இப்போது நான் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுடன் விளையாட சென்றால் என்னால் ரன்களை அடிக்க முடியாது. ஏனென்றால் நான் அவர்களைப் போல் பயிற்சி எடுத்து விளையாட வேண்டும். இதைதான் ஜிதேஷ் சர்மா செய்கிறார். எதிரணியின் பவுலிங் எப்படி இருந்தாலும் சரி அதற்கு ஏற்றார்போல தன்னை தயார்படுத்திக்கொள்கிறார். அவருடைய ஷாட்களை தேர்ந்தெடுக்கும் முறை அபாரம். அதனால்தான் சொல்கிறேன், இன்னும் ஓர் ஆண்டுக்குள் இந்திய அணியின் ஜெர்சியில் பார்க்கலாம்" என்கிறார் சேவாக்.