தோனி, கோலி twitter
T20

யாஷ் தயாளைத் திட்டிய விராட்.. தோனியைப் புகழும் ரசிகர்கள்.. காரணம் இதுதான்! #ViralVideo

பிளே ஆஃப் சுற்றில் அதிக போட்டிகளில் தோல்வியடைந்த அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. அதனால், இந்த சந்தோஷத்தை சென்னை அணி ரசிகர்கள்தான் அதிகம் கொண்டாடி வருகின்றனர்.

Prakash J

சென்னையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த பெங்களூரு அணி போடாத ஆட்டமில்லை. அதைவிட, அந்த அணி ரசிகர்கள் சென்னை அணி ரசிகரகளுக்குத் தந்த தொல்லைகள் கொஞ்சநஞ்சமல்ல. இந்த நிலையிலதான், ’வச்சான் பாரு ஆப்பு’ என்கிற கதையாய், எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் அணியிடம் அடிவாங்கி வெளியிருக்கிறது, பெங்களூரு அணி. இதனால் அவ்வணியின் ஐபிஎல் கோப்பை கனவும் முடிவுக்கு வந்தது.

அதேபோல் இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலமாக பிளே ஆஃப் சுற்றில் அதிக போட்டிகளில் தோல்வியடைந்த அணி என்ற சாதனையை ஆர்சிபி படைத்துள்ளது. அதனால், இந்த சந்தோஷத்தை சென்னை அணி ரசிகர்கள்தான் அதிகம் கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படிக்க: “போட்டில தோல்வியடைஞ்சாலும் அதே அன்புதான்..” - வளர்ப்பு நாய் குறித்து தோனி சொன்ன சுவாரஸ்யம்!

அதேநேரத்தில், இந்தப் போட்டியில் 17வது ஓவரை வீசிய யாஷ் தயாள், இரண்டு பவுண்டரிகளுடன் 11 ரன்களை வழங்கினார். இதனால் கோபமடைந்த விராட் கோலி, பவுண்டரி லைனில் நின்று கொண்டு யாஷ் தயாளை ஆக்ரோஷமாக திட்டினார். இது அவரை பின்தொடரும் பிரத்யேக கேமராவில் பதிவாகியது. இதைத்தான் பலரும் விமர்சித்து வருகின்றனர். தவிர, இந்தச் சம்பவத்தை வைத்து தோனியைப் புகழ்ந்தும் பேசிவருகின்றனர்.

இதுகுறித்து வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே, ”கடைசி ஓவர்களின்போது விராட் கோலி, இளம் வீரரான யாஷ் தயாளை ஆவேசமாக திட்டியதை பார்க்க முடிந்தது. இதனை பார்க்கவே கஷ்டமாக இருந்தது. இதன் காரணமாகத்தான் ரசிகர்கள் பலரும் விராட் கோலியைவிடவும் தோனியின் பக்கம் அணிவகுத்து நிற்கின்றனர். இளம்வீரர்களை எப்படி நடத்த வேண்டும் என்று தோனியிடம் இருந்து விராட் கோலி கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். இதைப் பார்த்த பலரும், இந்த விஷயத்தில் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் ’தல’ தோனி.. தோனிதான் என சென்னை ரசிகர்களும் புகழ்ந்து பேசி வருகின்றனர்.

இதையும் படிக்க: India Head Coach கம்பீரா? கலக்கத்தில் சீனியர் வீரர்கள்.. காரணம் இதுதான்!