காவ்யா மாறன் ட்விட்டர்
T20

RCBயிடம் வீழ்ந்தது SRH.! சொதப்பிய பேட்டர்களால் வருத்தத்தில் காவ்யா மாறன்.. #viralphotos #Viralvideo

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி பேட்டர்கள் அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது அவ்வணியின் உரிமையாளரான காவ்யா மாறனின் வருத்தப்பட்ட முகம், இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

10 அணிகள் பங்கேற்று விளையாடும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவின் நடப்புத் தொடர், அடுத்தகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 41 லீக் போட்டிகள் நிறைவுபெற்றுள்ளன. இதன் அடிப்படையில், ராஜஸ்தான், கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ ஆகிய அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன. சென்னை அணி 5வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில், நடப்புத் தொடரில் சில அசாத்திய சாதனைகளை நிகழ்த்திய ஹைதராபாத் அணி, நேற்றைய போட்டியில் பெங்களூருவிடம் சரணடைந்தது. முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது.

பின்னர் ஆடிய ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. முன்னதாக, இந்த அணி ஐபிஎல் தொடரிலேயே அதிகபட்சமாக 287 ரன்களை, இதே பெங்களூருவுக்கு எதிராக எடுத்திருந்தது. அதற்கு முன்பு மும்பைக்கு எதிராக 277 ரன்களை எடுத்திருந்தது. பின்னர், டெல்லி எதிராக 266 ரன்களை எடுத்தது. இப்படி ஐபிஎல்லில் அதிகபட்ச ரன்களை குவித்த பட்டியலில் முதல் இரண்டு இடங்களையும் ஹைதரபாத் அணியே உள்ளது. அதேபோல், பவர்பிளேயில் அதிக ரன்களைக் குவித்தும் சாதனை படைத்துள்ளது. டெல்லிக்கு எதிரான போட்டியில், முதல் 6 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கர்நாடக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு | மோடி பேச்சுக்கு காங். பதிலடி... கூட்டணிக் கட்சிக்கு சிக்கல்?

இப்படி நடப்புத் தொடரில் எல்லாம் இதர அணிகளின் பந்துவீச்சாளர்களையும் எல்லாம் பதம் பார்த்து ரன் மழை பொழிந்தனர், ஹைதராபாத் பேட்டர்கள். இதனால், ரசிகர்களும் ஹைதராபாத் போட்டி என்றாலே மைதானத்தில் குழும ஆரம்பித்தனர். குறிப்பாக, ரசிகர்களைவிட அந்த அணியின் உரிமையாளரான காவ்யா மாறன்தான் உற்சாகத்தில் இருப்பார். மைதானத்தில் ஒவ்வொரு முறையும் சிக்ஸர் பறக்கும்போதெல்லாம் கைதட்டி பேட்டர்களை உற்சாகப்படுத்துவார்.

ஆனால், நேற்றைய போட்டியில் வாணவேடிக்கை நிகழ்த்திவந்த அவர் அணியின் பேட்டர்கள் எல்லாம் வழக்கத்துக்கு மாறாக சோபிக்கத் தவறினர். இதனால், மைதானத்தில் அவரது முகம் முற்றிலும் மாறிப் போய் இருந்தது. ஒவ்வொரு முறையும் ஹைதராபாத் அணி பேட்டர்கள் அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது எல்லாம் அவரது முகம் வருத்தத்திலேயே இருந்தது. இதை, அடிக்கடி கேமரா படம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

இதையும் படிக்க: ஜிம்பாப்வே | சீறிப் பாய்ந்த சிறுத்தை.. போராடிய நாய்.. தப்பிப் பிழைத்த கிரிக்கெட் வீரர்!

சன்ரைசர்ஸ் அணி 2016 ஆம் ஆண்டு மட்டுமே கோப்பையை வென்றுள்ளது. அதேபோல், 2018 ஆம் ஆண்டு ரன்னர் அப் ஆகியுள்ளது. கடந்த 2023-ல் 10 ஆவது இடமும், 2022 மற்றும் 2021-ல் 8 ஆவது இடமும் தான் கிடைத்தது.

ஆனால், கடந்த சில சீசன்கள் மிகவும் மோசமாகவே அந்த அணிக்கு அமைந்தது. கடந்த சீசன்களில் ஹைதராபாத் அணி தோல்வியை தழுவும் போதெல்லாம் காவ்யா மாறன் சோகமாக இருக்கும் புகைப்படங்கள் வைரல் ஆகும்.

இதனை குறிப்பிட்டு ஜெயிலர் பட நிகழ்வின் போது காவ்யா மாறன் குறித்து ரஜினிகாந்த் பேசியிருந்தார். அதாவது, “தயவு செய்து நல்ல அணியனிரை உங்கள் அணிக்கு தேர்வு செய்யுங்கள். காவ்யா மாறன் அப்செட்டாக இருப்பதை டிவியில் பார்க்க கஷ்டமாக உள்ளது..” என்று கூறினார்.

ஹைதராபாத் அணியும் அருமையான பிளேயர்களுடன் களமிறங்கி நடப்பு சீசனில் சக்க போடு போட்டு வருகிறது. காவ்யா மாறன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படங்கள் நடப்பு சீசனில் அதிகம் வைரல் ஆகி வந்தது. ஆனால், பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை சந்தித்ததால் மீண்டும் பழைய வைரல் போட்டோவுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இது ஒருபுறம் இருக்க, ஆர்சிபி ரசிகர்கள் ஹைதராபாத் அணியை செம்ம ட்ரோல் செய்து வருகிறார்கள். ’அவங்க வேண்டும்னா எல்லா அணியையும் அவங்க கிரவுண்டுல சைலண்ட் ஆக்கி இருக்கலாம் நாங்க அவங்களையே அவங்க கிரவுண்டுல வச்சு சைலண்ட் ஆக்கி இருக்கோம்’என பெருமையாக பதிவிட்டு வருகிறார்கள்.

சும்மாவே ஆர்சிபி ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது, அதுவும் வலிமையான ஹைதராபாத் அணியை வீழ்த்தியதால் வைரல் போஸ்டுகளை அள்ளி தெளித்து வருகிறார்கள்.

ஆர்சிபி ரசிகர்கள் ஹைதராபாத் அணியை மட்டுமல்ல மும்பை மற்றும் சென்னை ரசிகர்களையும் வம்பிற்கு இழுத்து கலாய்த்து வருகிறார்கள். ஆனால், ஹைதராபாத் அணியை வீழ்த்தியபோதும் ஆர்சிபி இன்னும் கடைசி இடத்தில் தான் இருக்கிறது. அவர்களின் வெற்றியானது லக்னோ மற்றும் சென்னை அணிக்கு சாதகமாகவே மாறும்.

ஏனெனில் ஹைதராபாத் ஒரு படி கீழே வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனை குறிப்பிட்டு சென்னை ரசிகர்கள் மீம்ஸ் போட்டு வருகிறார்கள்.

ஒட்டு மொத்தத்தில் பெங்களூரு அணியின் வெற்றி இணைய உலகத்தை நேற்று முதல் ஆக்கிரமித்து வருகிறது.