usa twitter
T20

USA vs BAN T20|தொடர்ந்து 2 போட்டிகளில் வெற்றி.. அமெரிக்காவிடம் தொடரை இழந்த வங்கதேசம்!

Prakash J

ஐபிஎல்லுக்குப் பிறகு ஆடவர் டி20 உலகக் கோப்பை அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு தயாராகும் விதமாக பல்வேறு நாடுகள் பல இருதரப்பு டி20 தொடரில் விளையாடி வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் கடந்த மே 21ஆம் தேதி நடைபெற்ற முதல் டி20 போட்டியில், யாரும் எதிர்பாராத வகையில் அமெரிக்க அணி வெற்றிபெற்று அசத்தியது. அந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய வங்கதேச அணி 153 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய அமெரிக்கா 156 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இதையும் படிக்க: ”சிறந்த வீரராக இருக்கலாம்; ஆனால்” - சாடிய தோனி.. நீக்கப்பட்ட அந்த வீரர்.. தேடிய CSK ரசிகர்கள்!

இந்த நிலையில் இவ்விரு அணிகளுக்கான இரண்டாவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த அமெரிக்கா, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. ஆனால், பின்னர் ஆடிய வங்கதேச அணி 138 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இதனால், அந்த அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அமெரிக்காவிடம் தோல்வியடைந்தது. இதன்மூலம் பலம் வாய்ந்த வங்கதேச அணியை வீழ்த்தி தொடரை வென்றிருக்கும் அமெரிக்கா அணி, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் கவனம் ஈர்த்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி, நாளை நடைபெற இருக்கிறது.

இதையும் படிக்க: ”மூன்றாம் உலகப் போருக்கு இன்னும் சில வாரங்களே இருக்கு; இதெல்லாம் நடக்கும்” - இந்திய ஜோதிடர் கணிப்பு!