ind vs usa pt web
T20

T20WC INDvsUSA : திக்குமுக்காடிய அமெரிக்கா.. அஸ்வினின் 10 வருட சாதனையை முறியடித்த அர்ஷ்தீப் சிங்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் அமெரிக்க அணி 110 ரன்களை மட்டுமே எடுத்தது.

Angeshwar G

அமெரிக்கா vs இந்தியா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 25 ஆவது போட்டி Nassau County கிரிக்கெட் மைதானத்தில் நடந்தது. இதில் குரூப் Aவில் இடம்பெற்றிருந்த இந்தியா மற்றும் அமெரிக்க அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய அமெரிக்க அணி சீரான இடைவெளிகளில் விக்கெட்களை கொடுத்துக்கொண்டே இருந்தது. இன்னிங்ஸின் முதல் பந்திலேயே ஜஹாங்கீர் அர்ஷ்தீப் பந்தில் தனது விக்கெட்டைப் பறிகொடித்தார். ஓவரின் இறுதிப் பந்திலேயே மீண்டும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். அப்போது நின்ற ரன்கள், அதன்பிறகு ஆமை வேகத்திலேயே நகர்ந்தது. ஓவருக்கு ஒரு ரன் இரண்டு ரன்கள் என்றே அமெரிக்க பேட்ஸ்மேகள் எடுத்தனர். பவர் ப்ளேவின் முடிவில் அமெரிக்க அணி 2 விக்கெட்களை இழந்து 18 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

அர்ஷ்தீப் புதிய சாதனை

ரன்களும் இல்லை, விக்கெட்டும் விழவில்லை என்ற நிலையில், 8 ஆவது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட்டைக் கழற்றினார் பாண்டியா. சற்றே நிலைத்த ஆரோன் ஜோன்ஸின் விக்கெட்டை வீழ்த்தினார். ஷிவம் துபேவின் ஒரே ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சரை விளாசிய டெய்லரை அக்சர் படேல் வெளியேற்றினார். 30 பந்துகளை ஆடியிருந்த டெய்லர் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

விக்கெட்கள் விழுந்தாலும் அதிரடியாக ஆடிய நிதிஷ் குமாரை வெளியேற்றினார் அர்ஷ்தீப். பவுண்டரி லைனில் தலைக்கு மேல் வந்த பந்தை அசால்ட்டாக பிடித்து அசத்தினார் சிராஜ். 18 ஓவர்களின் முடிவில் தான் அமெரிக்க அணி100 ரன்களை எட்டி இருந்தது. 19 ஆவது ஓவரில் 3 ரன்களும், 20 ஆவது ஓவரில் 7 ரன்களை மட்டுமே எடுத்து மொத்தமாக 8 விக்கெட்களை இழந்து 110 ரன்களை மட்டுமே எடுத்தது அமெரிக்க அணி.

தடுமாறும் இந்தியா

111 ரன்கள் எனும் எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் விராட்கோலி ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்,. ரோகித் சர்மாவும் 3 ரன்களுக்கு வெளியேற இந்திய அணி பவர்ப்ளேவில் 2 விக்கெட்களை இழந்து 33 ரன்களை எடுத்து ஆடி வருகிறது.