ENG vs USA pt desk
T20

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: அமெரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து

webteam

டி20 உலகக் கோப்பை தொடரில், சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், இங்கிலாந்து அணி தனது கடைசி ஆட்டத்தை அமெரிக்காவுடன் நேற்று விளையாடியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, பேட்டிங் ஆடிய அமெரிக்கா, இங்கிலாந்து அணியின் அபார பந்து வீச்சால் 18.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து தரப்பில் 19வது ஓவர் வீசிய கிரிஸ் ஜோர்டன், ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

England

இதையடுத்து 116 ரன்கள் என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணி சார்பில் பிலிப் சால்ட் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர்.

அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியால், இங்கிலாந்து அணி 9.4 ஒவரில் 117 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 38 பந்துகளில் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் மூலம் முதல் அணியாக அரையிறுதி போட்டிக்கு இங்கிலாந்து அணி தகுதி பெற்றது.