t20 ட்விட்டர்
T20

டி20 WC| தீவிரவாத அச்சுறுத்தல்.. வடபாகிஸ்தானில் இருந்து வந்த தகவல்.. பாதுகாப்பை அதிகரிக்கும் WI!

Prakash J

’ஆடவர் டி20 உலகக்கோப்பை 2024’ கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் ஜூன் மாதம் முதல் நடைபெற இருக்கிறது. இதற்கான அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனன.

இந்த நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, டி20 உலகக்கோப்பையின்போது கரீபியன் (வெஸ்ட் இண்டீஸ்) நாடுகளை குறிவைத்துத் தாக்குவோம் என்று வடக்கு பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத அமைப்புகள் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதில், 2024 டி20 உலகக் கோப்பை உட்பட உலகின் முக்கிய நிகழ்வுகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்துவோம் எனத் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் தலைமை நிர்வாக அதிகாரி ஜானி கிரேவ்ஸ், ”எங்களுக்குக் கிடைத்த தகவல், ஐஎஸ் சார்பு உடைய அமைப்பிலிருந்து வந்துள்ளது. அது, பல நாடுகளில் தாக்குதல்கள் நடத்திய அமைப்பு. எனினும், ஆடவர் உலகக்கோப்பையில் அனைவரையும் பாதுகாப்பது எங்களது கடமை. அதற்கான திட்டம் எங்களிடம் உள்ளது. எனவே போட்டி நடைபெறும் நகரங்களில் உள்ள அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உறுதி செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: csk vs pbks| டக் அவுட் ஆன தோனி.. உற்சாகத்தில் கை தட்டிய ப்ரீத்தி ஜிந்தா.. #ViralVideo