மிட்செல் மார்ஷ், சூர்ய்குமார் யாதவ் x and insta pages
T20

World Cup | அன்று காலில் வைத்த மிட்செல் மார்ஷ்.. இன்று SKY செய்த தரமான சம்பவம்! வைரலாகும் புகைப்படம்

Prakash J

2024 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், இந்தியாவும் தென்னாப்ரிக்காவும் நேற்று பலப்பரீட்சை நடத்தியதில், ரோகித் சர்மா தலைமையிலான இந்தியப் படை மகுடம் சூடியுள்ளது. இதனால் இந்திய அணிக்கு பிரதமர் மோடி முதல் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னதாக, இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல வித்திட்டவர்களில் சூர்யகுமார் யாதவ்வும் ஒருவர். ஏற்கெனவே தன்னுடைய சாதுர்யமான பந்துவீச்சின் மூலம் தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கையைக் குலைத்திருந்தார் பும்ரா.

அவரைத் தொடர்ந்து பந்துவீச வந்த ஹர்திக் பாண்டியாவும் மேலும் தன் பங்குக்கு நம்பிக்கையை வார்த்தெடுத்தார். அந்த அளவுக்கு அணிக்கு உறுதுணையாக இருந்தவர் சூர்யகுமார் யாதவ். ஆம், அவர் மட்டும் டேவிட் மில்லரின் கேட்ச்சை பவுண்டரி எல்லை அருகே சென்று பிடித்திருக்காவிட்டால், இந்தியாவின் மகுட கனவு தகர்ந்து போயிருக்கும். அந்த ஒரு கேட்ச்தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்ததுடன், இந்திய அணிக்கும் உயிரைத் தந்தது. இந்த கேட்ச் மூலம் சூர்யகுமார் யாதவ்வும் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறார்.

இதையும் படிக்க; T20 WC தோல்வி | கவலையில் ஆழ்ந்த தென்னாப்பிரிக்கா வீரர்கள்.. அருகில் சென்று ஆறுதல் சொன்ன ரிஷப் பண்ட்!

இதற்கிடையே கோப்பை வென்ற சூர்யகுமார் யாதவ், அது தொடர்பான போட்டோக்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதன்படி இன்ஸ்டாகிராம் தளத்தில் அவர் பகிர்ந்த போட்டோ ஒன்று, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அவரும் அவரது மனைவியும் படுக்கையில் உலகக் கோப்பையுடன் தூங்குவது போன்ற படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் க்யூட்டாக இருப்பதாகவே பலரும் கூறி வருகிறார்கள். அதேநேரம் சிலர் இதை மிட்செல் மார்ஷ் உடன் ஒப்பிட்டும் கருத்து கூறி வருகிறார்கள்.

டி20 உலகக்கோப்பையுடன் சூர்யகுமார் யாதவ்

காரணம், கடந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பையை, நமது அணி ஆஸ்திரேலியாவிடம் தாரை வார்த்தது. அதை வாங்கிய ஆஸ்திரேலிய அணியினரின் கொண்டாட்டத்திற்குப் பிறகு மிட்செல் மார்ஷ், உலகக் கோப்பையைக் காலில் வைத்தபடி போஸ் கொடுத்திருந்தார். உலகக் கோப்பையை மதிக்காமல் காலில் வைத்தபடி போஸ் கொடுத்தது சர்ச்சையானது. தற்போது அவரின் செயலையும், சூர்யகுமாரின் இந்தச் செயலையும் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிக்க: T20 WC 2024 | ரோகித், கோலி ஓய்வு.. “இருவரையும் மிஸ் செய்வோம்” - ஹர்திக் பாண்டியா