பண்ட் web
T20

“ரிவர்ஸ் ஷாட் ஆடாதிங்க, பெரிய பரிசோதனை வேண்டாம்”-AUS உடனான போட்டிக்கு முன் இந்திய வீரருக்கு அட்வைஸ்

ஆஸ்திரேலியாவிற்கு எதிராக எதையும் புதிதாக பரிசோதிக்காமல் இந்திய அணி தங்களுடைய நார்மல் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என சூர்யகுமாரின் சிறுவயது பயிற்சியாளர் கூறியுள்ளார்.

Rishan Vengai

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் நாளை நடைபெறவிருக்கும் சூப்பர் 8 போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வியடைந்த ஆஸ்திரேலியா அணி, வெல்லவேண்டிய கட்டாயத்துடன் இந்திய அணியை எதிர்கொள்கிறது.

இதுகுறித்து இன்று பேசிய ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஸ், “அடுத்த போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டும், அதற்கு சரியான அணி இந்தியாதான்” என்று எச்சரிக்கும் வகையில் பேசியிருந்தார்.

mitchell marsh

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா போட்டிக்காக ரசிகர்கள் தற்போதே எதிர்ப்பார்ப்பை எகிறவிட்டுள்ளனர். இந்த சூழலில்தான் “ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெரிய பரிசோதனைகள் எதுவும் செய்யவேண்டாம், உங்களுடைய ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள்” என்று சூர்யகுமார் யாதவின் சிறுவயது கோச் அசோக் அஸ்வால்கர் இந்திய அணிக்கு அட்வைஸ் செய்துள்ளார்.

பண்ட் ரிவர்ஸ் ஷாட் ஆடாதிங்க..

போட்டிக்கு முன்னதாக ஏஎன்ஐ உடன் பேசியிருக்கும் அஸ்வால்கர், “தொடக்க வீரர்களான ரோகித் மற்றும் கோலி இருவரும் வேகப்பந்துவீச்சுக்கு எதிராக மெதுவாக தொடங்குகிறார்கள். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்கள் தங்கள் ஆட்டத்தை அதிகரிக்க முடிந்தால், இந்தியாவுக்கு அதை விட சிறந்தது எதுவுமில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா சாதாரண கிரிக்கெட்டை விளையாட முயற்சி செய்யவேண்டும், அதிக சோதனைகள் எதையும் செய்ய வேண்டாம். அவர்கள் கடந்த 5 போட்டிகளில் எப்படி விளையாடினார்களோ அப்படியே ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு எதிராகவும் ஆடவேண்டும்” என்று அட்வைஸ் செய்துள்ளார்.

rishabh pant

மேலும், “ரிஷப் பண்ட் சிறப்பாக விளையாடிவருகிறார், அவருக்கு ஒரு அட்வைஸ் சொல்லவேண்டுமானால் ரிவர்ஸ் ஷாட்டை விளையாடிதீர்கள் ரிஷப். உங்களிடம் ஹிட்டிங் பவர் இருக்கிறது, உங்களால் களத்தில் நின்று நிறைய ரன்களை அடிக்க முடியும். சூர்யகுமாரை பொறுத்தவரையில் அழுத்தத்தை எடுத்துக்கொள்ளாமல் உங்களுடைய ஆட்டத்தை விளையாடுங்கள்” என்று கூறியுள்ளார்.

sky

அதுமட்டுமில்லாமல் ஆடும் அணியில் குல்தீப் யாதவ் கீ ஃபேக்டராக இருப்பார் என்று தெரிவித்துள்ளார்.