shivam dube x
T20

”தயவுசெய்து ஷிவம் துபேவை உலகக்கோப்பைக்கு எடுங்க..”! - அஜித் அகர்கருக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஷிவம் துபே, அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்துவருகிறார்.

Rishan Vengai

நடப்பு 2024 ஐபிஎல் தொடர் வரும் மே 26-ம் தேதி முடிவடையவிருக்கும் நிலையில், டி20 உலகக்கோப்பை தொடரானது ஜூன் 2-ம் தேதியிலிருந்து தொடங்கவிருக்கிறது. எந்த 11 வீரர்களை இந்திய அணி உலகக்கோப்பைக்குள் எடுத்துச்செல்லப்போகிறது என்ற எதிர்ப்பார்ப்பு இருந்துவரும் நிலையில், மிடில் ஆர்டர் பேட்டராக வந்து ஸ்பின்னர்ஸ் மற்றும் ஃபாஸ்ட் பவுலர்ஸ் இருவருக்கு எதிராகவும் தைரியமான கிரிக்கெட்டை விளையாடும் ஷிவம் துபே பெயர் உலகக்கோப்பைக்கான பரிசீலனையில் இருந்துவருகிறது.

இதுவரை 8 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஷிவம் துபே, 51 சராசரியுடன் 170 ஸ்டிரைக்ரேட்டில் 3 அரைசதங்கள் உட்பட 311 ரன்களை குவித்து அசத்திவருகிறார். 22 சிக்சர்களை பறக்கவிட்டு இரண்டாவது அதிகபட்ச வீரராக இருந்துவரும் ஷிவம் துபேவின் சராசரியானது, இந்திய வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மன் கில், கேஎல் ராகுல் மூன்று வீரர்களை விடவும் அதிகமாகும்.

dube

பேட்டிங்கில் மரண ஃபார்மில் இருந்துவரும் ஷிவம் துபே, பந்துவீச்சிலும் 2 ஓவர்கள் வரை வீசக்கூடும் என்பதால் அவரை உலகக்கோப்பைக்கான டி20 அணியில் எடுத்துச்செல்லவேண்டும் என்ற குரல் எழுந்துவருகிறது. இதற்கிடையில் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தயவுசெய்து ஷிவம் துபேவை உலகக்கோப்பைக்கு எடுங்க..

கடைசியாக நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக 244 ஸ்டிரைக்ரேட்டில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷிவம் துபே, 27 பந்துகளை சந்தித்து 7 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 66 ரன்களை குவித்திருந்தார். ஸ்பின்னர்ஸ், பாஸ்ட் பவுலர்ஸ் என யாருக்கும் அடங்காமல் காட்டடி அடிக்கும் ஷிவம் துபேக்கு எதிராக ஸ்பின்னர்களை எடுத்துவரவே எதிரணி கேப்டன்கள் பயப்படுகிறார்கள்.

Shivam Dube

அந்தவகையில் ஸ்பின்னர்ஸ் மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சாளர்களிடமும் ஆதிக்கம் செலுத்தும் துபேவை டி20 உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை சுரேஷ் ரெய்னா வைத்துள்ளார்.

சிஎஸ்கே அணிக்காக ஷிவம் துபே 1000 ரன்களை கடந்தபிறகு தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் ரெய்னா, “ஷிவம் துபேவிற்காக டி20 உலகக்கோப்பை காத்திருக்கிறது. அஜித் அகர்கர் பையா தயவுசெய்து இவரை உலகக்கோப்பைக்கான அணியில் எடுங்கள்” என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.