Sunil Gavaskar File Image
T20

'இப்போது வாய்ப்பு கிடைத்தால் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவேன்' - சொல்கிறார் கவாஸ்கர்!

மைதானத்தில் ஃபீல்டர்கள் கேட்சைத் தவறவிட்டாலோ அல்லது பந்தை தடுக்காமல் விட்டாலோ டிரஸ்ஸிங் ரூமில் தோனி அவர்களை என்ன செய்வார் என்பதை நான் அறிய விரும்புகிறேன் என்கிறார் கவாஸ்கர்.

Justindurai S

இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நான்கு முறை கோப்பை வென்ற தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போதைய தொடரில் 5 போட்டிகளில் 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளி பெற்றுள்ளது. நாளை தனது சொந்த மண்ணில் ஐதராபாத்தை சந்திக்கவுள்ளது.

CSK

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கரிடம் பேட்டி ஒன்றில், வாய்ப்பு அளிக்கப்பட்டால், ஐபிஎல்லில் எந்த அணிக்காக விளையாட விரும்புவீர்கள் என்று கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், "மும்பை இந்தியன்ஸ், அப்படி இல்லையென்றால் வேறு எந்த அணி? சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவேன். எனக்கு இரண்டு விஷயங்களில் சிஎஸ்கே அணி பிடிக்கும். முதலில், சென்னை அணி உரிமையாளர்கள் கிரிக்கெட் மீது ஆர்வமாக உள்ளனர், அவர்கள் அணிக்காக நிறைய செய்திருக்கிறார்கள். அணி உரிமையாளர் சீனிவாசன் சார் கிரிக்கெட்டுக்காக நிறைய செய்திருக்கிறார்.

Dhoni - CSK

இரண்டாவது பெரிய காரணம் எம்.எஸ். தோனியுடன் டிரஸ்ஸிங் ரூமில் அமர்ந்து அவர் எப்படி அணிக்கு கேப்டனாக இருக்கிறார் என்று பார்க்க வேண்டும். மைதானத்தில் பீல்டர்கள் கேட்சை தவறவிட்டாலோ அல்லது பந்தைத் தடுக்காமல் விட்டாலோ டிரஸ்ஸிங் ரூமில் தோனி என்ன செய்வார் என்பதை நான் அறிய விரும்புகிறேன்.

தோனி, ஜடேஜா,

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி மீள்வது என்று நன்றாகவே தெரியும். அதற்கு தோனியின் கேப்டன்ஷிப்தான் காரணம். தோனி அணியை வழிநடத்தும் போது வீரர்கள் அதிக அழுத்தத்தை உணர மாட்டார்கள். அவர் முற்றிலும் கூலாக இருக்கிறார், அது அணிக்கு பெரிதும் உதவுகிறது.

ஃபீல்டர் பந்தைப் பிடிக்காமல் கோட்டைவிட்டால் அவரின் முகத்தைப் பார்க்கிறார். அது அவர்களை ஒருபோதும் அழுத்தத்திற்கு உள்ளாக்குவதில்லை. அதனால்தான் சிஎஸ்கே நெருக்கடியான சூழ்நிலைகளை அமைதியாக கடந்து செல்கிறது'' என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.