SA vs BAN pt desk
T20

T-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் - வங்கதேசம் அணியை போராடி வென்ற தென்னாப்ரிக்கா

webteam

நேற்று நியூயார்க் நகரில் நடந்த 21ஆவது லீக் போட்டியில் தென்னாப்ரிக்கா, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற தென்னாப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. தொடக்கம் முதல் வங்கதேச வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்ரிக்கா அணியினர் திணறினர்.

SA vs BAN

முன்னணி பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற, கிளாசன், டேவிட் மில்லர் ஜோடி பொறுமையுடன் விளையாடி ரன்களை சேர்த்தது. இறுதியில் தென்னாப்ரிக்கா அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. எளிய இலக்குடன் விளையாடிய வங்கதேசம் அணியினர், தடுமாற்றத்துடன் சிறுக சிறுக ரன்களை சேர்த்தனர்.

எனினும், அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்த அந்த அணி, 20 ஓவர்கள் முடிவில் 109 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் தென்னாப்ரிக்கா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. தென்னாப்ரிக்கா அணி தரப்பில் கேஷவ் மகாராஜ் 3 விக்கெட்களையும், ரபாடா, ஆன்ரிச் நோர்க்கியா ஆகியோர் தலா 2 விக்கெட்களை எடுத்தனர்.