Smiriti mandhana x
T20

‘உலக சாதனைக்கு 3 அரைசதங்களே மீதம்..’ - முதல் இந்திய வீராங்கனையாக 2 சாதனைகளை குவித்த மந்தனா!

Rishan Vengai

மகளிர் அணிகளுக்கு இடையேயான 9-வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரானது பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இலங்கையில் ஜூலை 19 முதல் தொடங்கி நடைபெற்ற ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நேபாள், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா மற்றும் தாய்லாந்து முதலிய 8 அணிகள் பங்கேற்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

தொடர் முழுவதும் அபாரமாக செயல்பட்ட இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் முதலிய நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தின.

இலங்கை டம்புலாவில் நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்தின. முதலில் விளையாடிய வங்கதேசம் 80 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 83 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் 2024 ஆசியக்கோப்பை தொடரில் முதல் அணியாக இந்திய மகளிர் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

25 சதங்கள் அடித்து அபாரம்:

ஆசியக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் 55 ரன்கள் அடித்த ஸ்மிரிதி மந்தனா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 25வது அரைசதமடித்து அசத்தினார்.

அதிக டி20 அரைசதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இந்திய வீராங்கனையாக இருக்கும் மந்தனா, உலக கிரிக்கெட்டர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.

முதலிடத்தில் 28 அரைசதங்களுடன் நியூசிலாந்து வீராங்கனை சுசன்னா வில்சன் பேட்ஸ் நீடிக்கிறார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள்..

வங்கதேசத்துக்கு எதிரான ஆசியக்கோப்பை அரையிறுதிப்போட்டியில் அரைசதமடித்த ஸ்மிரிதி மந்தனா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் (3,433 ரன்கள்) குவித்த இந்திய வீராங்கனையாக மாறி சாதனை படைத்துள்ளார்.

smriti mandhana

முதல் இடத்திலிருந்த இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் (3,415 ரன்கள்) சாதனையை முறியடித்து ஸ்மிரிதி மந்தனா அசத்தியுள்ளார். அதேபோல் உலக அரங்கில் அதிக டி20 ரன்கள் குவித்த இரண்டாவது வீராங்கனையாக மாறியுள்ளார்.

முதலிடத்தில் 4,348 ரன்களுடன் நியூசிலாந்து வீராங்கனை சுசன்னா வில்சன் பேட்ஸ் நீடிக்கிறார்.