பதிரானா - சாய் சுதர்சன் web
T20

”அண்ணா பதிரானா வேரியேசன் பத்தி சொல்லுங்க..” - 2 மாதத்திற்கு முன்பே CSK-ஐ எதிர்கொள்ள தயாரான சுதர்சன்!

Rishan Vengai

கடந்த 2022 ஐபிஎல் தொடரில் முதன்முதலாக அறிமுகமான தமிழக வீரர் சாய் சுதர்சன், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே 4 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி நல்ல அறிமுகத்தை பெற்றார். அதற்குபிறகு 2023 ஐபிஎல் தொடரிலும் தன்னுடைய அபாரமான ஆட்டத்தை தொடர்ந்த சாய்சுதர்சன், சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப்போட்டியில் 47 பந்துகளுக்கு 8 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என துவம்சம் செய்து 200 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடி மிரட்டிவிட்டார்.

ஆரம்பத்தில் 130-150 ஸ்டிரைக்ரேட்டில் விளையாடிவந்த சாய் சுதர்சன், தொடர்ந்து தன்னுடைய பேட்டிங் திறமையை மெருகேற்றி தற்போது ஐபிஎல்லில் முதல் சதமடித்து அசத்தியுள்ளார்.

sai sudharsan

நடப்பு ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் சாய்சுதர்சன், ஒரு சதம் உட்பட 47 சராசரியுடன் 527 ரன்களை குவித்துள்ளார்.

2 மாதங்களுக்கு முன்பே சிஎஸ்கேவை எதிர்கொள்ள தயாரான சாய்சுதர்சன்!

தமிழகத்தை சேர்ந்த வீரரான சாய்சுதர்சன் தொடர்ந்து சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுவருகிறார். கடந்த 2023 ஐபிஎல் பைனலில் 96 ரன்களை குவித்து சிஎஸ்கே ரசிகர்களை பயமுறுத்திய சாய்சுதர்சன், நடப்பி ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு எதிராக சதமடித்து தோல்விக்கு அழைத்துச்சென்றார்.

இதுவரை 4 போட்டிகளில் சிஎஸ்கேவிற்கு எதிராக விளையாடியிருக்கும் சாய்சுதர்சன், 176 ஸ்டிரைக்ரேட் மற்றும் 64 சராசரியுடன் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதத்துடன் 250 ரன்கள் குவித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் சென்னை அணிக்கு எதிராக எந்தளவு சிறப்பாக செயல்பட்டுவருகிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

Sai Sudharsan

ஆனால் இதற்கும் ஒருபடி மேலாக சென்று ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 2 மாதங்கள் முன்பே சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடவேண்டும் என்ற வேட்கையில் சாய்சுதர்சன் செய்த சுவாரசியமான சம்பவம் வெளியாகியுள்ளது.

pathirana

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உடன் பேசிக்கொண்டிருந்த முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் யோ மகேஷ், சாய்சுதர்சன் குறித்த ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு சாய்சுதர்சன் என்னை போனில் அழைத்தார். அப்போது “அண்ணா பதிரானாவோட யார்க்கர் வேரியேசன் பற்றி ஒருமுறை நீங்க பேசியிருந்திங்க, அதைபற்றி விளக்கமா சொல்லமுடியுமா” என்று கேட்டார். அதைப்பற்றி பேசியது எனக்கே சரியாக நியாபகமில்லை, அதை அவர் எப்படி நியாபகம் வைத்திருந்து கேட்டார் என்று தெரியவில்லை.

sai sudharsan

பின்னர் நான் பேசியிருந்ததை கண்டுபிடித்து, சாய்சுதர்சனிடம் பதிரானாவின் யார்க்கர் வேரியேசன் குறித்து விளக்கமளித்தேன். இதை அவர் ஐபிஎல் தொடங்குவதற்கு 2 மாதங்களுக்கு முன்பு கேட்டார். அப்போதே அவர் சிஎஸ்கேவுக்கு எதிராகவும், பதிரானாவுக்கு எதிராகவும் விளையாட தயாராகிகொண்டிருந்தார். அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று சுவாரசியமான தகவலை பகிர்ந்தார்.