Sachin Tendulkar Twitter
T20

“சுப்மன் கில் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் செய்தார்” - சச்சின் டெண்டுல்கர் கலாய் ட்வீட்!

குஜராத் அணியை சேர்ந்த சுப்மன் கில் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் செய்ததாக சச்சின் டெண்டுல்கர் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார்.

Justindurai S

நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது குஜராத் டைட்டன்ஸ். இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் இருந்த சுப்மன் கில் 52 பந்துகளில் 104 ரன்கள் எடுத்தார். 5 பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்கள் அவரது ஆட்டத்தில் அடங்கும்.

Shubman Gill

இந்த தோல்வியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது. பெங்களூரு தோல்வி அடைந்த காரணத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நான்காவது அணியாக நுழைந்துள்ளது.

தனது அபார ஆட்டத்தால் குஜராத் அணியை வெற்றி பெறச் செய்ததுடன், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைவதற்கு காரணமாகவும் அமைந்தார் சுப்மன் கில். முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

கேமரூன் கிரீன் 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து மும்பை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

Cameron Green

இந்நிலையில் கேமரூன் கிரீன், சுப்மன் கில் ஆகிய இருவரும் மும்பை அணிக்காக நன்றாக பேட்டிங் செய்ததாக சச்சின் டெண்டுல்கர் கிண்டலாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர், “மும்பை அணி பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. விராட் கோலியும் அடுத்தடுத்து சதங்கள் விளாசி நன்றாக விளையாடி வருகிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மே 23) நடக்கும் முதல் தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

Mumbai Indians

வரும் 24ஆம் தேதி சென்னையில் நடக்கும் எலிமினினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் மும்பை இந்தியன்ஸ் அணி மோதுகிறது.