ruturaj cricinfo
T20

16 வருடங்களுக்கு பிறகு முதல் சிஎஸ்கே கேப்டன்.. தோனியின் சாதனையை உடைத்த ருதுராஜ் கெய்க்வாட்!

Rishan Vengai

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியில், 60 பந்துகளில் 12 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என ஒரு தரமான இன்னிங்ஸ் ஆடிய சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 108 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் போட்டியை முடித்தார்.

சென்னையில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற லக்னோ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். சிறப்பான தாக்குதலை வெளிப்படுத்திய லக்னோ பவுலர்கள், அஜிங்கியா ரஹானேவை 1 ரன்னிலும், டேரில் மிட்செலை 11 ரன்னிலும் வெளியேற்றி விரைவாகவே விக்கெட்டுகளை எடுத்துவந்து சென்னை அணியை பேக்ஃபுட்டில் போட்டனர்.

ruturaj

ஆனால் அதற்கு பிறகு ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷிவம் துபேவுடன் சிறப்பான பார்ட்னர்ஷிப் போட்ட சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனியாளாக அணியை தாங்கி எடுத்துவந்தார். ஒருபுறம் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷிவம் துபே 7 சிக்சர்களை பறக்கவிட்டு 27 பந்தில் 66 ரன்கள் குவிக்க, இறுதிவரை களத்தில் இருந்த ருதுராஜ்108 ரன்கள் அடித்து சென்னை அணியை 210 என்ற நல்ல டோட்டலுக்கு எடுத்துச்சென்றார்.

முதல் சிஎஸ்கே கேப்டனாக ருதுராஜ் சாதனை!

லக்னோ அணிக்கு எதிராக 60 பந்துகளில் 108 ரன்கள் குவித்த ருதுராஜ் கெய்க்வாட், ஐபிஎல் வரலாற்றில் சதமடிக்கும் 8வது ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்தார். அதேநேரத்தில் சிஎஸ்கே அணி கேப்டனாக 2019ம் ஆண்டு தோனி அடித்த 84 ரன்கள் ரெக்கார்டை உடைத்த ருதுராஜ், சென்னை அணிக்காக சதமடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை படைத்து அசத்தினார்.

ruturaj

அதுமட்டுமல்லாமல் சென்னை அணிக்காக இரண்டு சதங்கள் அடித்த முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, ஷேன் வாட்சன் போன்ற வீரர்களின் சாதனையை ருதுராஜ் சமன்செய்து அசத்தியுள்ளார்.

சதமடித்த ஐபிஎல் கேப்டன்கள்:

1. விராட் கோலி - 113, 109, 108*, 100*, 100 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)

2. கேஎல் ராகுல் - 132* (பஞ்சாப் கிங்ஸ்), 103*, 103* (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்)

3. டேவிட் வார்னர் - 126 (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்)

4. வீரேந்திர சேவாக் - 119 (டெல்லி கேபிடல்ஸ்)

sachin

5. சஞ்சு சாம்சன் - 119 (ராஜஸ்தான் ராயல்ஸ்)

6. ஆடம் கில்கிறிஸ்ட் - 106 (பஞ்சாப் கிங்ஸ் பின்னர் கிங்ஸ் XI பஞ்சாப்)

7. சச்சின் டெண்டுல்கர் - 100* (மும்பை இந்தியன்ஸ்)

8. ருதுராஜ் கெய்க்வாட் - 108* (சென்னை சூப்பர் கிங்ஸ்)