ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் முகநூல்
T20

”எல்லையை மீறினால்..” - நேட்டோ நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்ய அதிபர்!

நேட்டோ நாடுகளுக்கு எதிராக ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Prakash J

நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அண்டை நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு, பிப்ரவரி 24ஆம் தேதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிதி உதவி மற்றும் ஆயுத உதவி அளித்து வருவதால், உக்ரைனும் ரஷ்யாவுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த நிலையில், நேட்டோ நாடுகளுக்கு எதிராக ரஷ்ய அதிபர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர், ”இந்தப் போரின் போக்கு தற்போது ரஷ்யாவுக்குச் சாதகமாகச் சென்று கொண்டிருப்பதனால் போரில் தங்கள் இலக்கை எட்டுவதற்கு அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கான தேவை இருக்காது. அதேசமயம், ரஷ்யா அணுஆயுதத்தைப் பயன்படுத்தாது என மேற்கத்திய நாடுகள் எண்ணுவது தவறு.

மேலும், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்வதில் நேட்டோ நாடுகள் தங்கள் எல்லையை மீறி விட வேண்டாம். ரஷ்யாவுடன் மோதல் ஏற்பட்டால், இந்தப் போர் விரைவில் அணு ஆயுத போராக மாறிவிடும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிக்க: ஒரு எருமை மாட்டுக்கு இருவர் உரிமை.. திணறிய போலீஸ்.. இறுதியில் தீர்வுகண்ட எருமை.. உ.பியில் ருசிகரம்!