ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் புதிய தலைமுறை
T20

"ஈ சாலா கப் நம்தே" என தொடர்ந்து ஏமாறும் பெங்களூரு ரசிகர்கள்.. 9 முறை முன்னேறிய பிறகும் தொடரும் சோகம்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 9 முறை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய போதும், இம்முறையும் ‘ஈ சாலா கப் நம்தே’ என நம்பிய தன் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது பெங்களூரு அணி.

PT WEB

நடப்பு ஐ.பி.எல் தொடரில், பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு மங்கிய போதும், கடைசி 6 போட்டிகளில் அதிரடி வெற்றிகளை பெற்று 4 ஆவது இடத்தை பிடித்தது பெங்களூரு அணி. கடைசி லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி, ரன்ரேட் அடிப்படையில் பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற பெங்களூரு, எலிமினேட்டரில் ராஜஸ்தானிடம் தோல்வியை தழுவியது.

RR vs RCB

இதுவரை ஐ.பி.எல் தொடரில் 9 முறை நாக் அவுட் மற்றும் பிளே ஆஃப்க்கு தகுதி பெற்ற போதும், அத்தனை முறையையும் கோப்பையை வெல்லாமல் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இதில்,

  • 2009 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி வரை முன்னேறிய பெங்களூரு அணி, ஐதராபாத் அணியிடம் தோல்வியடைந்தது.

  • 2010 ஆம் ஆண்டு அரையிறுதியில் மும்பை இந்தியன்ஸிடம் வீழ்ந்தது.

  • 2011 ஆம் மீண்டும் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பெங்களூருவுக்கு தோல்வியை பரிசளித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்.

  • 2015 ஆண்டும் 2 ஆவது குவாலிஃபையரில் சென்னையிடம் வீழ்ந்தது.

  • 2016 ஆம் ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற பெங்களூரு அணி, மீண்டும் ஒரு தோல்வி ஐதராபாத்திடம் இருந்து கிடைத்தது.

  • இதன் பிறகு 2020, 2021 ஆம் ஆண்டுகளில் எலிமினேட்டரிலேயே வெளியேறியது.

  • 2022 ஆம் ஆண்டு 2 ஆவது குவாலிஃபையரில் ராஜஸ்தானிடம் மண்ணை கவ்வியது பெங்களூரு அணி.

இப்படி 8 முறை ரசிகர்களை ஏமாற்றிய பெங்களூரு, நடப்பு தொடரிலும் ஏமாற்றியுள்ளது.