indian players x page
T20

T20WC பயிற்சி| ஷிவம்துபேவுக்கு பவுலிங் பயிற்சி.. ரோகித் பிரத்யேக கவனிப்பு.. ஓரங்கட்டப்படும் ஹர்திக்?

ஷிவம் துபேவை, ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டியாக ரோஹித் மாற்ற திட்டமிட்டு வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Prakash J

அமெரிக்க மற்றும் மேற்கிந்திய தீவு நாடுகளில் ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று இரவுமுதல் நடைபெற இருக்கிறது. இதில் 20 அணிகள் பங்கேற்க இருக்கின்றன. இதற்கான பயிற்சி ஆட்டம் கடந்த சில நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இந்திய அணி இன்று (ஜூன் 1) வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி 14 வீரர்களுடன் களமிறங்கியது. விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, இந்திய அணி வலைப் பயிற்சியில் ஈடுபட்டபோது சிஎஸ்கே அணி வீரரான ஷிவம் துபேவுக்கு ரோஹித் சர்மா சிறப்பு பந்துவீச்சு பயிற்சியை அளித்தது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக புதிய பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சியாளர்கள்தான் பயிற்சி அளிப்பார்கள்.

ஆனால், இன்றைய வலைப்பயிற்சியின்போது ரோஹித் சர்மாவே ஷிவம் துபேவுக்கு சுமார் 30 நிமிடங்கள் பிரத்யேக பந்துவீச்சு பயிற்சி அளித்தார். இதன்மூலம் ஷிவம் துபேவை, ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டியாக ரோஹித் மாற்ற திட்டமிட்டு வருகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிக்க:தோனி, கோலி, ரோகித் யாராலும் செய்ய முடியாத சாதனை! தனி ஒருவனாக சாதித்த தினேஷ் கார்த்திக்!

நடப்பு ஐபிஎல்லில் மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட பிறகு, ரோஹித்தை பவுண்டரி எல்லையில் ஃபீல்டிங் செய்ய நிறுத்தியது விமர்சனமானது. அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ஷிவம் துபேவுக்குப் பயிற்சியளித்தாரா எனக் கேள்வி எழுந்துள்ளது. ஷிவம் துபேவை வெறும் பேட்டராக மட்டும் வைத்துக்கொள்ளாமல் பந்துவீசவும் பழக்கினால், ஹர்திக்கைப்போல் ஆல்ரவுண்டராக அணிக்குள் இழுக்க முடியும் என்ற நம்பிக்கையில்தான் ரோஹித் செய்கிறாரா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

என்றாலும், ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் துணை கேப்டனாக இடம்பெற்று இருக்கிறார். அவரை அணியைவிட்டு நீக்குவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அதேசமயம், ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏதாவது ஏற்பட்டால் அவருக்குப் பதில் ஷிவம் துபேவைக் களமிறக்கு நிறைய வாய்ப்புள்ளது. இதில் ஷிவம் துபே 4வது இடத்தில் இறங்கி விளையாடக் கூடியவர். ஆனால், ஹர்திக் 5 மற்றும் 6 இடத்தில்கூட இறங்கிய விளையாடக்கூடியவர். ஆக, ஹர்திக்கை அவர் நீக்க நினைத்தால் அது இந்திய அணிக்கு அழுத்தத்தைத் தரும் என்றும் கூறப்படுகிறது. அத்துடன், இன்றைய பயிற்சிப் போட்டியில் ஹர்திக் பாண்டியா 4 சிக்ஸர்களை விளாசினார். 23 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார்.

இதையும் படிக்க: T20 WC| சூப்பர் 8 சுற்றில் நுழையப்போகும் அணிகள்.. Final வரை செல்லும் வெஸ்ட் இண்டீஸ்? ஏன் தெரியுமா?