ரவி சாஸ்திரி Espn
T20

சிஎஸ்கேவுக்கு 'வாய்ப்பில்லை ராஜா' - எந்த அணி ஐபிஎல் கோப்பையை வெல்லும்? இது ரவி சாஸ்திரியின் கணிப்பு!

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போதிருக்கும் புள்ளிகள் பட்டியலின்படி குஜராத் டைடன்ஸ் முதலிடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 2ஆம் இடத்திலும், சிஎஸ்கே 3ஆம் இடத்திலும் மற்றும் ராஜஸ்தான் அணி 4ஆம் இடத்திலும் இருக்கிறது.

Jagadeesh Rg

உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சியான “புதிய தலைமுறை”யின் டிஜிட்டல் கட்டுரைகளை ஆண்ட்ராய்டு செயலியில் பெற https://bit.ly/PTAnApp - பதிவிறக்கம் செய்க!

IOS செயலியை அப்டேட் செய்து கொள்ள https://bit.ly/PTIOSnew

இந்தாண்டு ஐபிஎல் கோப்பையை தோனியின் சிஎஸ்கே வெல்வதற்கு வாய்ப்பில்லை என்றும் குஜராத் டைடன்ஸ் பட்டத்தை கைப்பற்றும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போதிருக்கும் புள்ளிகள் பட்டியலின்படி குஜராத் டைடன்ஸ் முதலிடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 2ஆம் இடத்திலும், சிஎஸ்கே 3ஆம் இடத்திலும் மற்றும் ராஜஸ்தான் அணி 4ஆம் இடத்திலும் இருக்கிறது. இப்போது ஐபிஎல் தொடரில் 2ஆவது கட்டப்போட்டிகள் நடைபெற்று வருவதால் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்தாண்டு ஐபிஎல் பட்டத்தை எந்த அணி வெல்லும் என்ற ஆருடங்கள் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் சொல்ல தொடங்கியுள்ளனர்.

Hardik Dhoni

அதன்படி அண்மையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும் வர்ணனையாளுருமான ரவி சாஸ்திரி "இப்போதுள்ள நிலவரப்படி குஜராத் டைடன்ஸ் அணியே கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக கருதுகிறேன். ஏனென்றால் அந்த அணி வீரர்கள் சீராக விளையாடுகிறார்கள். அந்த அணியில் 7 முதல் 8 வீரர்கள் எப்போதும் சிறப்பான பங்களிப்பை கொடுக்கிறார்கள். மேலும், ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிறார்கள், தேற்றிக் கொள்கிறார்கள்" என்றார்.

Dhoni, Sanju Samson, Ravi Shastri,

மேலும் பேசிய அவர், "இந்த ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் ஒரு கேப்டனாக தன்னை நிரூபித்திருக்கிறார். அந்த அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை அவர் சிறப்பாக பயன்படுத்தியிருக்கிறார். ஒரு நல்ல கேப்டனால்தான் மூன்று சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட முடியும். மேலும் அவர்களை திறமையாக பயன்படுத்த முடியும்" என்றார்.