ஷாகித் அப்ரிடி எக்ஸ் தளம்
T20

சரிவில் பாகிஸ்தான் அணி | “சிஸ்டத்தை மாற்றினால் வேலைக்கு ஆகாது” - ஆலோசனை சொன்ன ஷாகித் அப்ரிடி!

பாகிஸ்தான் அணி, தொடர்ந்து சரிவைச் சந்திப்பதற்கான காரணம் குறித்து அவ்வணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.

Prakash J

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணி, தொடரிலிருந்து வெளியேறியது. இதனால், அவ்வணி மீது நிறைய விமர்சனம் கிளம்பியது. குறிப்பாக, அவ்வணியின் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டனே அணியை கடுமையாக சாடியிருந்தது கிரிக்கெட் உலகில் பேசுபொருளானது.

இதையடுத்து, டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படாத வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் களமிறங்கியது. முதற்கட்டமாக தேர்வாளர்களான வஹாப் ரியாஸ் மற்றும் அப்துல் ரசாக் ஆகியோர் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் (பிசிபி) அதிரடியாக நீக்கப்பட்டனர். இந்த நிலையில், பாகிஸ்தான் அணி சரிவைச் சந்திப்பதற்கான காரணம் குறித்து அவ்வணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: எல்லை தாண்டிய காதல் | காதலரை மணமுடிக்க போலி ஆவணத்தில் பாக். சென்ற இந்தியப் பெண்; விசாரணையில் அம்பலம்

இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியொன்றில், “பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தொடர்ந்து மாற்றிக்கொண்டே வருகிறார்கள். இப்படி ஒவ்வொரு முறையும் ஒட்டுமொத்தமாக மாற்றிக்கொண்டே வந்தால் அது எப்படி சரியான முறையில் இயங்கும்? ஒவ்வோர் ஆண்டுக்கும் ஒரு தலைவர் கிரிக்கெட் வாரியத்திற்கு நியமிக்கப்படுகிறார். ஒவ்வோர் ஆண்டும் புது மாதிரியான சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

இப்படி செய்துகொண்டிருந்தால் எதுவும் வேலைக்கு ஆகாது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மீண்டும் உயிர்பெற வேண்டும் என்றால், அனைத்து சீனியர் உறுப்பினர்களும் சீனியர் வீரர்களும் இணைந்து ஒரு திட்டத்தை உருவாக்குங்கள். மூன்று ஆண்டுக்கு ஒரு திட்டத்தை ஃபாலோ செய்யுங்கள். அப்படிச் செய்தால் நிச்சயம் நல்ல முடிவுகள் கிடைக்கும். இதை விட்டுவிட்டு ஆண்டுதோறும் நீங்கள் சிஸ்டத்தை மாற்றிக் கொண்டிருந்தால் கடினமான முடிவுகள்தான் கிடைக்கும்” என்றுகூறி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க: India head coach | “லட்சுமணன்தான் சரியான ஆள்...” கவுதம் கம்பீரை கடுமையாகச் சாடிய பாகிஸ்தான் வீரர்!