video image x page
T20

பஞ்சு மெத்தையில் ஃபீல்டிங் செய்த பாகிஸ்தான் வீரர்கள்.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்.. #ViralVideo

Prakash J

நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதிபெறாத பாகிஸ்தான் அணி, தொடரிலிருந்து வெளியேறியது. இதனால், அவ்வணி மீது நிறைய விமர்சனம் கிளம்பியுள்ளது. குறிப்பாக, அவ்வணியின் பயிற்சியாளரான கேரி கிறிஸ்டனே அணியை கடுமையாக சாடியிருந்தது கிரிக்கெட் உலகில் பேசுபொருளானது. இதையடுத்து, டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படாத வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் முனைப்பில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தான் அணி வீரர்கள் பஞ்சு மெத்தையில் ஃபீல்டிங் பயிற்சி மேற்கொண்ட சம்பவம் ரசிகர்களிடையே கிண்டல் செய்யப்பட்டு வருவதுடன், அத்தகைய வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்னும் 6 மாதங்களில் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடத்தப்படவுள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியில் மாற்றத்தைக் கொண்டுவர அந்நாட்டின் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

இதையும் படிக்க: நேபாளத்தில் அரசியல் சடுகுடு|கூட்டணிக்கட்சிகள் விலகல்.. ஆளும் அரசுக்கு சிக்கல்; அமைகிறது புதிய ஆட்சி!

இதையடுத்து, வீரர்களுக்கு முதலில் ஃபிட்னஸ் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கராச்சியில் உள்ள ராணுவ முகாமில் பாகிஸ்தான் வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தான் ஃபீல்டிங் பயிற்சியாளர் மஸ்ரூர், வீரர்களுக்கு ஃபீல்டிங் பயிற்சி அளித்துள்ளார்.

அதில் ஸ்லிப் ஃபீல்டிங்கிற்காகக் கொடுக்கப்பட்ட பயிற்சியில் பாகிஸ்தான் வீரர்கள் பஞ்சு மெத்தையை பயன்படுத்தியுள்ளனர். தரையில் கீழே விழுந்தால் உடலில் காயம் ஏற்படும் என்பதால், பஞ்சு மெத்தையில் தாவி விழுந்து ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த அந்நாட்டு ரசிகர்களே கிண்டலடித்து பதிவுகளை இட்டு வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாலிவுட் நடிகை ஹினா கான் வெளியிட்ட உணர்வுப்பூர்வமான வீடியோ!