ind vs pak web
T20

”பாகிஸ்தான் வீரர்கள் இந்திய அணி குறித்து பேச தடை..” - பரபரப்பான கருத்தை வெளியிட்ட PAK A கேப்டன்!

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 2024-ம் ஆண்டுக்கான 5வது ஆடவர் வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பை தொடர் நாளை தொடங்கவிருக்கிறது.

Rishan Vengai

2024 ஆடவர் வளர்ந்துவரும் வீரர்களுக்கான டி20 ஆசியக்கோப்பை தொடரானது, நாளை அக்டோபர் 18-ம் தேதி தொடங்கி அக்டோபர் 27-ம் தேதிவரை மொத்தம் 10 நாட்கள் நடத்தப்படவிருக்கிறது.

இதுவரை 50 ஓவர்கள் கொண்ட தொடராகவே நடத்தப்பட்ட நிலையில், நடப்பாண்டுக்கான வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பை தொடரானது டி20 போட்டிகள் கொண்ட தொடராக முதல்முறையாக நடத்தப்படவிருக்கிறது.

men's t20 emerging asia cup

இந்த தொடரில் 8 ஆசிய அணிகளான “இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ, இலங்கை ஏ, வங்கதேசம் ஏ, ஓமன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஹாங்காங் மற்றும் ஆப்கானிஸ்தான்” முதலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டிருக்கும் பிரிவில் நான்கு-நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் ஏ-ல் “ஆப்கானிஸ்தான், வங்கதேசம், ஹாங்காங் மற்றும் இலங்கை” அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி-ல் “இந்தியா, பாகிஸ்தான், யுஏஇ மற்றும் ஓமன்” முதலிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு பிரிவில் இருக்கும் 4 அணிகளில் ஒவ்வொரு அணி மற்ற அணிகளை எதிர்கொண்டு மூன்று குரூப் போட்டிகளில் மோதும். இதில் பட்டியலில் முதலிரண்டு இடம் பிடிக்கும் நான்கு அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்து இறுதிப்போட்டியில் பங்கேற்பார்கள்.

பாகிஸ்தான் ஏ கேப்டன் சொன்ன கருத்து..

ஓமனில் தொடங்கவிருக்கும் 2024 ஆடவர் வளர்ந்துவரும் வீரர்களுக்கான ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நவம்பர் 19-ம் தேதி பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக பேசியிருந்த பாகிஸ்தான் ஏ அணி கேப்டன் மொஹமது ஹரிஸ், “பாகிஸ்தான் டிரஸ்ஸிங் ரூமில் இந்தியாவைப் பற்றி பேசவோ, விவாதிக்கவோ அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தினார்.

இது குறித்து மேலும் பேசிய அவர், "நாங்கள் மற்ற அணிகளையும் மனதில் கொள்ள வேண்டும். நான் மூத்த பாகிஸ்தான் அணிக்காக விளையாடியுள்ளேன், இந்தியாவுக்கு எதிரான போட்டியின் போது என்ன நடக்கும் என்பது எனக்குத் தெரியும். அழுத்தம் நிறைந்த சூழல் வீரர்களை திசைதிருப்பக்கூடும்” என்று அவர் மேலும் கூறினார்.

திலக் வர்மா

இந்தியா ஏ: கேப்டனாக திலக் வர்மா நியமிக்கப்பட்டிருகுக்ம் இந்திய அணியில், அபிஷேக் சர்மா (வி.கீ), பிரப்சிம்ரன் சிங் (வி.கீ), நிஷாந்த் சிந்து, ரமன்தீப் சிங், நேஹல் வதேரா, ஆயுஷ் படோனி, அனுஜ் ராவத் (வாரம்), சாய் கிஷோர், ஹிருத்திக் ஷோக்கீன், ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அன்ஷுல் கம்போஜ் , அக்யூவ் கான், ரசிக் சலாம்.

இதுவரை 4 எடிசன்கள் நடந்திருக்கும் நிலையில் இந்தியா ஒருமுறை மட்டுமே கோப்பை வென்றுள்ளது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளும் இரண்டுமுறை கோப்பைகளை வென்றுள்ளன.