ரூபன் டிரம்பிள்மேன் X page
T20

T20 WC 2024 | டி20 வரலாற்றில் முதன்முறை.. புதிய சாதனை படைத்த நமீபியா பவுலர்!

Prakash J

அமெரிக்க மற்றும் மேற்கிந்திய தீவு நாடுகளில் தொடங்கிய ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லாமல் அரங்கேறி வருகிறது. அந்த வகையில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள நமீபியா மற்றும் ஓமன் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த ஓமன் அணி, முதலில் 109 ரன்களுக்குச் சுருண்டது.

இதையடுத்து பின்னர் ஆடிய நமீபியா அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்து சமன் செய்தது. இரு அணிகளும் சமனில் இருந்ததால் சூப்பர் ஓவர் கொண்டு வரப்பட்டது. இதில் நமீபியா அணி வெற்றிபெற்றது. உலகக்கோப்பை தொடரில் ஆடிய இந்த இரண்டு கத்துக்குட்டி அணிகளும், இறுதிவரை போட்டியை ரசிகர்களுக்கு விறுவிறுப்பாகக் கொண்டுசென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: கம்பீரின் ரகசியத்தை உடைத்த தினேஷ் கார்த்திக்... India Head Coach பதவிக்கு ஆபத்தா?

இது ஒருபுறமிருக்க, மறுபுறம் டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே இதுவரை எந்தப் பந்துவீச்சாளரும் செய்யாத ஒரு புதிய சாதனையை நமீபியாவை சேர்ந்த ரூபன் டிரம்பிள்மேன் படைத்துள்ளார். ஓமன் அணிக்கு எதிராக, முதலாவது ஓவரை வீசிய அவர், முதல் இரண்டு பந்துகளிலேயே இரண்டு விக்கெட்களைச் சாய்த்தார். ஓமன் அணியின் காஷ்யப் பிரஜாபதி மற்றும் ஆக்கிப் இலியாஸ் என ஆகிய இரண்டு வீரர்களையும் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆக்கி வெளியேற்றினார்.

இவர்கள் இருவரும் கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். இதன்மூலம், போட்டியின் முதல் ஓவரிலேயே எதிரணியின் இரண்டு பேட்டர்களையும் கோல்டன் டக் அவுட் முறையில் வீழ்த்திய நமீபியா பந்துவீச்சாளர் ரூபன் டிரம்பிள்மேன், கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனைக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார்.

இதையும் படிக்க: T20 WC| சூப்பர் 8 சுற்றில் நுழையப்போகும் அணிகள்.. Final வரை செல்லும் வெஸ்ட் இண்டீஸ்? ஏன் தெரியுமா?