தமன்னா ட்விட்டர்
T20

IPL ஒளிபரப்பு விவகாரம் | நடிகை தமன்னாவுக்கு மும்பை போலீஸ் சம்மன்..

ஐபிஎல் விளையாட்டுப் போட்டிகளை, Fairplay செயலி சட்ட விரோதமாக ஒளிப்பரப்பியதாக தொடுக்கப்பட்ட வழக்கில், நடிகை தமன்னாவிற்கு மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

Prakash J

ஒவ்வோர் ஆண்டும் களைகட்டி வரும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, தற்போதும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி, 5வது முறையாக கோப்பையை வென்றது. இந்த நிலையில் கடந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் ஒளிபரப்பு உரிமையை வியாகாம் (viacom) பெற்றிருந்தது.

viacom - IPL

அதேநேரத்தில், அந்த ஆண்டு மிகப் பிரபலமான செயலிகளில் ஒன்றாக விளங்கிய Fairplay செயலியில், IPL 2023 போட்டி சட்டவிரோதமாக ஒளிபரப்பப்பட்டது. Fairplay செயலியில் சட்டவிரோதமாக ஒளிபரப்பியதால் கோடிக்கணக்கில் இழப்பு ஏற்பட்டதாக வியாகாம் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி, Fairplay செயலியின் விளம்பர தூதுவரான நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஏப்ரல் 29ஆம் தேதி நடிகை தமன்னா நேரில் ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பாலிவுட்டைச் சேர்ந்த நடிகர்கள், பாடகர்கள் பலரும் Fairplay செயலியை விளம்பரப்படுத்தி இருந்தனர்.

இதையும் படிக்க: இஸ்ரேல் - காஸா போர் | அமெரிக்காவில் பல்கலை மாணவர்கள் போராட்டம்.. கைதுசெய்யும் காவல்துறை! #Viralvideo