தோனி ட்விட்டர்
T20

“மேட்சுல வயசாயிடுச்சுனு யாரும் பாவம் பார்க்க மாட்டாங்க..” வெளிப்படையாகப் பேசிய தோனி!

"தொழில் முறை விளையாட்டில் வயதாகி விட்டது என்பதற்காக யாரும் பாவம் பார்க்க மாட்டார்கள்" என சிஎஸ்கே வீரர் தோனி வெளிப்படையாகப் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Prakash J

என்னதான் நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறி இருந்தாலும், நாளுக்கு நாள் அவ்வணி குறித்தும் தோனி குறித்தும் விதவிதமான பேச்சுகள் வந்தபடியே இருக்கின்றன. அதிலும் தோனியின் ஓய்வு பற்றிய செய்தியும், அதற்குப் பின் சிஎஸ்கேவின் நிலை பற்றிய செய்தியும்தான் கடுமையாகப் பேசப்படுகின்றன.

தோனி

இந்த நிலையில் தோனி அளித்திருக்கும் பேட்டி, இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "தொழில் முறை விளையாட்டில் வயதாகி விட்டது என்பதற்காக யாரும் பாவம் பார்க்க மாட்டார்கள்" என அவர் வெளிப்படையாகப் பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: India Head Coach கம்பீரா? கலக்கத்தில் சீனியர் வீரர்கள்.. காரணம் இதுதான்!

மேலும் அந்தப் பேட்டியில், “நான் ஆண்டு முழுவதும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவது இல்லை. ஆனாலும், என்னை முழு உடற்தகுதியுடன் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும், உடற்தகுதியுடன் இருக்கக்கூடிய இளம்வீரர்களுடன் நான் போட்டிபோட வேண்டும். அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டிலும் விளையாடுகிறார்கள்.

தொழில் முறை விளையாட்டு என்பது எளிதானதல்ல. உங்களுக்கு வயதாகி விட்டது என்பதற்காக யாரும் பாவம் பார்க்க மாட்டார்கள்.

தோனி

நீங்கள் தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால், மற்ற வீரர்களைப்போல நீங்களும் உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். ஆனால், வயது உங்களுக்கு அந்த கருணையை வழங்காது. எனவே நாம் உணவுப் பழக்கம், உடற்பயிற்சி போன்ற விஷயங்களை கவனத்தில்கொள்ள வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார். தோனி, இப்படிய வெளிப்படையாகப் பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்க: “டெஸ்ட்டிலிருந்து விரைவாகவே ஓய்வை அறிவிக்க இதுதான் காரணம்” - 10 ஆண்டுகளுக்குப் பிறகு பேசிய தோனி!