மோஹித் சர்மா - ரிஷப் பண்ட் x
T20

‘ஒரே போட்டியில் 2 பேரின் ஓய்வை உறுதிசெய்த பண்ட்..’! 73 ரன்கள் வாரிவழங்கி மோஹித் சர்மா மோசமான சாதனை!

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் விட்டுக்கொடுத்த பவுலர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார் மோஹித் சர்மா.

Rishan Vengai

டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்துவீச்சாளர் மோஹித் சர்மா வீசிய 20வது ஓவரில் 4 சிக்சர்கள் 1 பவுண்டரி என வானவேடிக்கை காட்டிய ரிஷப் பண்ட் மோசமான சாதனைக்கு மோஹித்தை அழைத்துச்சென்றார்.

4 ஓவர்களில் 73 ரன்களை விட்டுக்கொடுத்த மோஹித் சர்மா, ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள்..

2018-ம் ஆண்டு ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசிய சன்ரைசர்ஸ் ஹைத்ராபாத் பவுலர் பசில் தம்பி, 4 ஓவர்களில் 70 ரன்களை விட்டுக்கொடுத்து ஐபிஎல்லில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பவுலராக மாறினார்.

இந்நிலையில் 5 வருடங்களுக்கு பிறகு 4 ஓவரில் 73 ரன்களை விட்டுக்கொடுத்திருக்கும் மோஹித் சர்மா, பசில் தம்பியின் மோசமான சாதனையை முறியடித்து தனதாக்கிக்கொண்டார்.

mohit sharma

மிகவும் விலையுயர்ந்த ஐபிஎல் ஓவர்கள்:

73/ 0 - மோஹித் ஷர்மா - GT vs DC - 2024

70/ 0 - பசில் தம்பி - SRH vs RCB - 2018

69/ 0 - யாஷ் தயாள் - GT vs KKR - 2023

ஒரே போட்டியில் 2 வீரர்களின் ஓய்விற்கு வழிவகுத்த பண்ட்..

பெரிய சாலை விபத்துக்கு பின் ஒரு வருடங்களுக்கு பிறகு மீண்டும் கிரிக்கெட்டிற்கு திரும்பியிருக்கும் ரிஷப் பண்ட், அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பழைய விண்டேஜ் பண்ட்டாக கலக்கிவருகிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியிருக்கும் பண்ட், 48 சராசரி மற்றும் 161 ஸ்டிரைக்ரேட்டுடன் 3 அரைசதங்கள் உட்பட 342 ரன்களை குவித்துள்ளார். அதிக ரன்கள் எடுத்தவர்களில் 3வது இடத்தில் இருக்கும் ரிஷப் பண்ட், டி20 உலகக்கோப்பைக்கான பெயர் தேர்வுகளில் ஒருவராக இருந்துவருகிறார்.

rishabh pant

ரிஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்திருக்கும் பிசிசிஐ தொடர்ந்து அவருடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்திவருகிறது. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு கூட ரிஷப் பண்ட் குறித்து பேசியிருந்த பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, “பண்ட் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், இந்திய டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பிடிப்பார்” என்று தெரிவித்திருந்தார்.

rishabh pant

தற்போது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கான டி20 உலகக்கோப்பை ரேஸில், “சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன் மற்றும் தினேஷ் கார்த்திக்” முதலிய வீரர்களுடன் போட்டியில் இருந்தார். டி20 உலகக்கோப்பைக்கான தேர்வில் சஞ்சு சாம்சன் மற்றும் தினேஷ் கார்த்திக்கின் பெயரே முன்னிலையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஒரு அசாத்தியமான 88 ரன்கள் ஆட்டத்தால் தினேஷ் கார்த்திக் வாய்ப்பை தட்டிப்பறித்துள்ளார். ஒரே போட்டியில் “மோஹித் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக்” இரண்டு வீரர்களின் ஓய்விற்கு வழிவகுத்துள்ளார் ரிஷப் பண்ட்.