usa vs pak web
T20

“பணத்துக்காக IPL போனால் இதுதான் நடக்கும்” ட்ரோல் செய்த PAK ரசிகர்.. பங்கமாக கலாய்த்த முன். NZ வீரர்!

Rishan Vengai

2024 டி20 உலகக்கோப்பையானது பரபரப்பான மோதல்களுக்கு பிறகு சூப்பர் 8 சுற்றை நோக்கி நகர்ந்துள்ளது. 20 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடைபெற்ற நிலையில், “தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ்” முதலிய 5 அணிகள் சூப்பர் 8 சுற்றில் தங்களுடைய இடத்தை உறுதிசெய்துள்ளன.

அதேபோல அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் “நியூசிலாந்து, இலங்கை, நமீபியா, உகாண்டா, ஜெனிவா, ஓமன்” முதலிய 6 அணிகள் தொடரிலிருந்தே வெளியேறியுள்ளன.

nz vs afg

மீதமிருக்கும் 3 இடங்களுக்காக “அமெரிக்கா, பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, வங்கதேசம், நெதர்லாந்து” முதலிய 6 அணிகளுக்கு இடையே இன்னும் மோதல்கள் இருந்துவருகின்றன.

பரிதாபமாக வெளியேறிய நியூசிலாந்து..

குரூப் C-ல் சொந்த மண்ணில் ஆடும் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், உகாண்டா மற்றும் ஜெனிவா முதலிய அணிகள் இடம்பெற்றன.

இதில் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு அணிகளும் நியூசிலாந்து அணிக்கு எதிராக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோற்கடித்தது. அதன் காரணமாக அந்த அணி மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் வென்றால் கூட சூப்பர் 8 சுற்றுக்கு செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

nz - kane

கடந்த 2021 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இறுதிப்போட்டி மற்றும் 2022 உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக அரையிறுதிப்போட்டி வரை முன்னேறிய நியூசிலாந்து அணி, இந்தமுறை லீக் போட்டியுடன் பரிதாபமாக வெளியேறியுள்ளது.

afg vs nz

அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3-0 என வெற்றியை ருசித்திருக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.

நியூசிலாந்தை ட்ரோல் செய்த பாகிஸ்தான் ரசிகர்!

2024 டி20 உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய நியூசிலாந்து அணியை ட்ரோல் செய்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், “தேசிய விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பணத்திற்காக ஐபிஎல் விளையாட போனால் இப்படித்தான் நடக்கும். பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யாமல் அவர்களின் முக்கிய வீரர்கள் ஐபிஎல்லை தேர்ந்தெடுத்தார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி 2024 டி20 உலகக் கோப்பைக்கு தங்களை தயார்படுத்த நியூசிலாந்துக்கு ஒரு சிறந்த வாய்ப்பு கிடைத்தது, அவர்கள் அதை தவறவிட்டனர். தற்போது உலகக் கோப்பையில் இருந்தே வெளியேறிவிட்டனர்” என்று பதிவிட்டிருந்தார்.

பங்கமாக கலாய்த்த முன்னாள் நியூசி வீரர்..

பாகிஸ்தான் ரசிகரான ஊடகவியலாளரின் பதிவிற்கு ரிப்ளை செய்திருந்த முன்னாள் நீயூசிலாந்து வீரர் மெக்லெனகன், அமெரிக்கா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்ததை கூறி பதிலடி கொடுத்தார்.

பாகிஸ்தான் ரசிகரின் பதிவிற்கு ரிப்ளை செய்த அவர், “ நீங்கள் எங்கள் தோல்வியை மிக மோசமாக எடுத்துக்கொண்டீர்கள், ஆனால் ஒன்றை மறந்துவிட்டீர்கள். பாகிஸ்தான் அணியான நீங்கள் சி அணிகளாக இருக்கும், அயர்லாந்து மற்றும் அமெரிக்காவிடம் படுதோல்வியை சந்தித்தீர்கள்" என்று மெக்லெனகன் பதிலடி கொடுத்துள்ளார்.